ஆட்சியர்களின் அலுவலகங்கள் முற்றுகை.. வலுக்கும் சிஏஏ எதிர்ப்பு போராட்டம்!

 

ஆட்சியர்களின் அலுவலகங்கள் முற்றுகை.. வலுக்கும் சிஏஏ எதிர்ப்பு போராட்டம்!

இன்று சென்னை சேப்பாக்கத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஐ எதிர்த்து இஸ்லாமியர்களின் போராட்டத்துக்குத் தடை  விதிக்க கோரி இந்திய மக்கள் மன்ற தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வரும் மார்ச் 11 ஆம் தேதி வரை போராட்டம் நடத்தக் கூடாது என்று கூறி இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். ஆனால், எதிர் மனுதாரராக எங்களைச் சேர்க்காததால் இந்த தீர்ப்பு ஏற்கக்கூடியது அல்ல என்றும் அறிவித்த படியே போராட்டம் நடைபெறும் என்றும் இஸ்லாமிய அமைப்பினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

ttn
 
அதன் படி இன்று சென்னை சேப்பாக்கத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர். பேரணி நடத்தப்பட்டால் கைது செய்யப்படுவர் என்று காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் தெரிவித்திருந்தும் போராட்டம் வலுப்பெற்று வருகிறது. சென்னையில் மட்டும் அல்லாது மதுரை மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்திலும் இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தின் அடுத்த கட்டமாக பெரம்பலூர், திருச்சி,திருவண்ணாமலை, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இஸ்லாமியர்கள் ஆட்சியர்களின் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.