ஆட்சியராக மீண்டும் ரோகிணியை நியமிக்க வேண்டும்: சேலத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு!

 

ஆட்சியராக மீண்டும் ரோகிணியை நியமிக்க வேண்டும்: சேலத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு!

சேலம் ஆட்சியராக மீண்டும் ரோகிணியை நியமிக்க வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 

சேலம் : சேலம் ஆட்சியராக மீண்டும் ரோகிணியை நியமிக்க வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 

rohini

தமிழக அரசின் சார்பில் கடந்த 28 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி உட்பட 4 மாவட்ட ஆட்சியர்கள் அதிரடியாக மாற்றப்பட்டனர் . அதில்  சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தமிழ்நாடு இசை பல்கலைக்கழக பதிவாளராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 18 மாதங்களாக சேலம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த ரோகிணி தனது அதிரடியான செயல்களால் ஊடகங்களுக்கு அதிகம் பரிட்சியமானவர். 

rohini

இந்நிலையில்  ரோகிணி பணியிட மாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து அகில பாரத இந்து மகா சபை சார்பில் சேலம் மாவட்டம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டர்களில் ‘நேர்மையாக செயல்பட்ட திறமையான சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் ரோஹினி அவர்களை பணியிட மாற்றம் செய்ததைக் கண்டிக்கிறோம். மீண்டும் அவரை ஆட்சித் தலைவராக பணியமர்த்த வேண்டும்’ என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த போஸ்டர்களால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.