ஆட்கடத்தல், விபச்சாரத்தில் சிக்கும் ரோஹிங்கியா அகதிகள்

 

ஆட்கடத்தல், விபச்சாரத்தில் சிக்கும் ரோஹிங்கியா அகதிகள்

தாக்கா: ரோஹிங்கியா அகதி முகாம்களில் உள்ள மக்கள் ஆட்கடத்தல், விபச்சாரம் உள்ளிட்ட சுரண்டலில் சிக்கும் அவலம் வளர தொடங்கியுள்ளது.

வங்கதேசத்தில் அமைந்திருக்கும் உலகின் மிகப்பெரிய அகதி முகாம்களாக பார்க்கப்படும் ரோஹிங்கியா அகதி முகாம்களில் உள்ள மக்கள் ஆட்கடத்தல், விபச்சாரம் உள்ளிட்ட சுரண்டலில் சிக்கும் அவலம் வளரத் தொடங்கியுள்ளது.

இந்த நெருக்கடியில் சிக்கியுள்ள பெண்கள் போலியான வேலைகளில் சிக்கி விபச்சாரத்துக்குள் தள்ளப்படுவதாக ஐ.நா. வேதனை தெரிவித்துள்ளது. அத்துடன் முகாமின் மக்கள் தொகையில் 56 சதவீதக்கும் மேலாக உள்ள 17 வயதிற்குட்பட்ட சிறியவர்கள் ஆட்கடத்தலின் முக்கிய இலக்காகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முகாமில் பாலின அடிப்படையிலான வன்முறை நடக்கின்றது. அதாவது பாலியல் வன்முறைக்கான வாய்ப்பு அதிகம். ஆட்கடத்தல் நடக்கின்றது; பெண்கள் கடத்தப்படுகின்றனர் என அவசர கால உதவி திட்டத்தின் மேலாளர் டாம் பெட்கோஸ் தெரிவித்திருக்கிறார்.

கடந்த ஆகஸ்ட் 2017-ஆம் ஆண்டு மியான்மரில் ஏற்பட்ட வன்முறைகளை தொடர்ந்து சுமார் 7 லட்சம் ரோஹிங்கியா அகதிகள் அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சமடைந்தனர். மியான்மரின் ரக்ஹைன் பகுதியில் ஏற்பட்ட  வன்முறை சம்பவங்களை இனச் சுத்திகரிப்போடு ஒப்பிட்ட ஐக்கிய நாடுகள் சபை இனச்சுத்திகரிப்பை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பதை வெளிப்படுத்தும் பாடப்புத்தகம் இது என குறிப்பிட்டிருந்தது.