ஆடையில்லாத விடியோவை வெளியிட்ட அமலா பால்?! 

 

ஆடையில்லாத விடியோவை வெளியிட்ட அமலா பால்?! 

நடிகை அமலா பாலின் ஆடை படத்தின் புதிய லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. 

சென்னை: நடிகை அமலா பாலின் ஆடை படத்தின் புதிய லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. 

நடிகை அமலா பால் கைவசம் நிறைய படங்கள் இல்லை என்றாலும் எதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி எப்பவும் ட்ரெண்டிங்கில் உள்ளார். அதுவும் சமீபத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஆடை படத்தின் ட்ரைலர் தான் ஹாட் டாபிக்காக மாறியது. அதை பற்றிய பேச்சு அடங்குவதற்குள் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் வெளியிட்டனர். 

அதைத்தொடர்ந்து நேற்று ‘ஆடை’ படத்தின் முதல் லிரிக்கல் வீடியோ வெளியாகும் என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில் அறிவித்த பாடி அந்த பாடல் வெளியாகியுள்ளது. அதில் ‘நீ வானவில்லா’ என்று தொடங்கும் அந்த பாடல் முழுக்க முழுக்க 3D அனிமேஷனில் உருவாகியுள்ளது.

மேலும் ஒரு பெண் அதில் ஆடை இல்லாமல் வருவது போல் காட்டப்பட்டுள்ளது. அதனால் இது மீண்டும் ஒரு பூகம்பத்தை கிளப்பும் என்றே கருதப்படுகிறது. மேலும் ஆடை படத்திற்கு தனியாக விளம்பரம் தேடத் தேவையில்லை. டீஸர், போஸ்டர்களே என்று மக்கள் அமலா பாலை திட்டினாலும் படத்தை பற்றி அதிகம் பேசுவதால், இது படக்குழுவிற்குக் கிடைத்த வெற்றி என்றும் கூறலாம்.