’ஆடை’யில்லாத அமலா பாலுடன் விக்ரமின் ‘கடாரம் கொண்டான்’ மோதியிருக்கக்கூடாது…

 

 ’ஆடை’யில்லாத அமலா பாலுடன் விக்ரமின் ‘கடாரம் கொண்டான்’ மோதியிருக்கக்கூடாது…

கடாரம் கொண்டானை விட 5 மடங்கு குறைச்சலான பட்ஜெட்டில் உருவாகியுள்ள அதே சமயத்தில் அதிக எதிர்பார்ப்புள்ள ‘ஆடை’படத்துடன் விக்ரம் படம் மோதியிருக்கக்கூடாது.

கடாரம் கொண்டானை விட 5 மடங்கு குறைச்சலான பட்ஜெட்டில் உருவாகியுள்ள அதே சமயத்தில் அதிக எதிர்பார்ப்புள்ள ‘ஆடை’படத்துடன் விக்ரம் படம் மோதியிருக்கக்கூடாது. இன்னும் ஒரு வாரம் தள்ளியே வந்திருக்கலாம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.

ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள கடாரம் கொண்டான், ஆக்‌ஷன் த்ரில்லர் படம். அதே நேரத்தில், ரத்னகுமார் இயக்கியுள்ள ஆடை படத்தின் நாயகி அமலா பால், ஆடையில்லாமல் தோன்றிய படத்தின் டீசர் வெளியாகி ஊடகங்களில் தலைப்புச் செய்தியானது. இந்த இரண்டு படங்களும் சினிமா ரசிகர்களை மட்டுமல்ல அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்க்கும் படமாக அமைந்துள்ளன.

ஆனால் சினிமா வர்த்தக வட்டாரங்கள் விக்ரமின் கடாரம் கொண்டான் படத்தைவிட அமலா பாலின் ‘ஆடை’இல்லாத படத்துக்குத்தான் அதிக ஓப்பனிங் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். இப்போதைக்குக் கிடைத்த தகவலின்படி கடாரம் கொண்டான் படம் 450க்கும் மேற்பட்ட திரைகளிலும், ஆடை படம் 275 திரைகளிலும் இன்று திரையிடப்பட உள்ளன.

சமீபகாலமாக நயன்தாரா படங்கள், டாப்ஸியின் ‘கேம் ஓவர்’, ஐஸ்வர்யா ராஜேஷின் ‘கனா’போன்ற படங்கள் கதாநாயகர்களின் படங்களைவிட நல்லபடியாக ஹிட் அடித்துள்ளன. அந்த வரிசையில் சமீபத்தில் அதிகம் பரபரப்புக்கு ஆளாகியுள்ள ‘ஆடை’படம் ஒருவேளை கடாரம் கொண்டானை காலி செய்துவிட்டால் அது விக்ரமின் கேரியருக்கு எவ்வளவு பெரிய அசிங்கம். அதை கமலும் விக்ரமும் தவிர்த்திருக்கலாம் என்று பொதுவாகவே ஒரு கருத்து நிலவுகிறது.