ஆடி வெள்ளிக்கிழமைக்கு பால் கொழுக்கட்டை

 

ஆடி வெள்ளிக்கிழமைக்கு பால் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்
தேங்காய்          -1
அரிசி       -1டம்ளர்
வெல்லம்          -250கிராம்

தேவையான பொருட்கள்
தேங்காய்          -1
அரிசி       -1டம்ளர்
வெல்லம்          -250கிராம்

செய்முறை

paal kolukattai

தேங்காய் எடுத்து நன்றாக அரைத்து, பால் பிழிந்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். அரிசியை நன்றாக கழுவி, ஊற வைத்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். தேங்காய்ப்பாலில் வெல்லத் தூளை கலந்து கொதிக்க விடவும். அப்போது கெட்டியாக அரைத்த அரிசி மாவை ஜாங்கிரி கரண்டி அல்லது சிறிய ஓட்டை உள்ள கரண்டியில் விட்டு தேய்க்கும் போது சிறு சிறு உருண்டைகளாக பாலில் விழும். கிளறிவிடும் போது மாவு வெல்லத் தண்ணீரில் வேகும். பிறகு இறுகியவுடன் ஏலத்தூள் சேர்த்து அடுப்பை அணைத்து விடலாம். இப்போது சுவையான வாசனையுடன் தேங்காய்ப்பால் ரெடி!