ஆடி தள்ளுபடியை விட,அதிரடி தள்ளுபடியில் இறங்கிய ஃப்ளிப்கார்ட்..! சம்மருக்கு டூர் போக முடியாதோ !

ஆடி தள்ளுபடியை விட,அதிரடி தள்ளுபடியில் இறங்கிய ஃப்ளிப்கார்ட்..! சம்மருக்கு டூர் போக முடியாதோ !

நம்ம ஊரில் பொதுவாக ஆடி மாதங்களில் பெரிதாக விசேஷங்கள் நடக்காது. அந்த நேரத்தில் பொருட்களை விற்றுத்தீர்க்க ‘பிரமாண்ட ஆடி தள்ளுபடி’ என்று விளம்பரம் கொடுத்து வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் இழுக்க ஒவ்வொரு பிரமாண்ட ஸ்டோர்களும்,விதவிதமான ஆபர்களை அள்ளித்தருவார்கள்!
 
flipkart

பெரும்பாலான கடைகளில் தள்ளுபடி விலை என்பதே ஒரு கண் துடைப்புதான்! ஒரிஜினல் விலையைவிட கொஞ்சம் கூடுதலாக விலை வைத்து,அதில் ஒரு தொகையை தள்ளுபடியாக அறிவிப்பார்கள்.
 
அதே போல்,இப்போது ஆன்லைன் ஷாப்பிங் ஏரியாவிலும் ஏகத்துக்கும் தள்ளுபடி அறிவிப்புகள் வந்திக்கிட்டேதான் இருக்கு.முதன் முதலாக இந்தியாவில் தொடங்கப்பட்ட ஆன்லைன் நிறுவனம் ஃப்ளிப்கார்ட்.

summer sale

இப்போதான் சில நாளுக்கு முன்னாள் சம்மர் சேல்ஸ் என்று போட்டு பெரிய அளவில் பரபரப்பை உண்டாக்கினார்கள்.அதுலருந்தே நம்ம ஜனங்க இன்னும் மீண்டு வரவில்லை! அதற்குள் big shopping days ன்னு இன்னொரு ஆஃபரோடு களம் இறங்கியிருக்கு flipkart நிறுவனம்!

big shopping days

ஏற்கனவே போட்ட  சம்மர் சேல்ஸ் அப்போ ஐ போன் XR,நோக்கியா 6.1 ப்ளஸ், நோக்கியா 5.1 ப்ளஸ்,ரியல்மி 2 ப்ரோ,ஹானர் 9 லைட், ஹானர் 10 உள்ளிட்ட போன்களுக்கு அதிரடியான  விலைகுறைப்பு  செய்திருந்தார்கள்.
 
ஐ போன் XR, 59,900 ரூபாய்க்கு விற்கப்பட்டது.எச்.டி.எப்.சி கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்ட்ல வாங்கியவர்களுக்கு ஆன் திஸ்  ஸ்பாட் 5,990 ரூபாய் கேஷ்-பேக்காக கொடுத்து வாடிக்கையாளர்களை மகிழ்வித்தார்கள்.இந்த முறை வருகிற மே 15-ஆம் தேதி தொடங்குது big shopping days.மே 19-ஆம் தேதி வரை ஐந்து நாட்களும் அமர்க்களம்  பண்ணப் போகிறார்கள்.
ஸ்மார்ட் போன்ல ஆரம்பிச்சு,எலெக்ட்ரானிக் ஐட்டங்கள் ,கம்பியூட்டர் என்று பெரிய அளவில் இருக்கும் இருக்குமாம்! சம்மருக்கு ஜாலியா டூர் போயிட்டு வரலாம்னா விட  மாட்டாய்ங்க போலருக்கே!