ஆஞ்சநேயர் கோவில் கற்கண்டு பிரசாதத்தில் கலப்படமா?… வீடியோ வெளியிட்ட அர்ச்சகர்!

 

ஆஞ்சநேயர் கோவில் கற்கண்டு பிரசாதத்தில் கலப்படமா?… வீடியோ வெளியிட்ட அர்ச்சகர்!

அந்த கற்கண்டில் கலப்படம் இருப்பதாகக் கூறி அந்த கோவில் அர்ச்சகர் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டியில்  ஆஞ்சநேயர் கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவிலில் பிரசாதமாகக் கல்கண்டு வழங்கப்பட்டு வருகிறது. அந்த கற்கண்டில் கலப்படம் இருப்பதாகக் கூறி அந்த கோவில் அர்ச்சகர் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில், கற்கண்டில் கலப்படம் இருப்பதாகவும், அதில் வெள்ளை நிறத்தில் உருண்டையாக பிளாஸ்டிக் பொருள் இருப்பதாகவும் அதனைத் தண்ணீரில் போட்டால் கூட கரையவில்லை என்றும் கூறியுள்ளார். 

 

இந்த வீடியோ வைரல் ஆகி இது தொடர்பாக  உணவு பாதுகாப்புத்துறைக்குப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் பேரில்  உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேரில் சென்று கற்கண்டை ஆய்வு செய்துள்ளனர். மேலும், அதில் கலப்படம் இருப்பது உறுதி செய்யப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குழந்தைகள் விரும்பி உண்ணும் கற்கண்டில் கலப்படம் இருப்பதாக எழுந்த புகார் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.