ஆஜராகலன்னா.. ரிமாண்ட் தான்: விஷாலுக்கு நீதிபதி எச்சரிக்கை!

 

ஆஜராகலன்னா.. ரிமாண்ட் தான்: விஷாலுக்கு நீதிபதி எச்சரிக்கை!

சேவை வரி செலுத்தாதது தொடர்பாக நடிகர் விஷால் வரும் அக்.26ம் தேதி ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: சேவை வரி செலுத்தாதது தொடர்பாக நடிகர் விஷால் வரும் அக்.26ம் தேதி ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஷால் சுமார் ரூ.1 கோடிக்கும் மேலாக சேவை வரி செலுத்தாததால், நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சேவை வரித்துறை கடந்த 2 ஆண்டுகளாக பலமுறை சம்மன் அனுப்பியும் விஷால் ஆஜராகவில்லை. இதன் காராணமாக சேவை வரித்துறையினர், சென்னை பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் மீது வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில், இவ்வழக்கு இன்று நீதிபதி மலர்வதி தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சேவை வரித்துறையினரின் சம்மனுக்கு ஏன் விளக்கம் கொடுக்கவில்லை, ஏன் நேரில் ஆஜராகவில்லை என்று கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு விஷால் தரப்பில் முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை.

இதைத் தொடர்ந்து இவ்வழக்கு விசாரணையை வரும் அக்.26ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அன்றைய தினம் நடிகர் விஷால் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும். ஆஜராகாவிட்டால் ரிமாண்ட் உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி எச்சரித்தார்.