ஆச்சியை அடுத்து பிரபல சாம்பார் பொடிக்கு செக்… பாக்டீரியா இருப்பதாக கண்டுபிடிப்பு!  

 

ஆச்சியை அடுத்து பிரபல சாம்பார் பொடிக்கு செக்… பாக்டீரியா இருப்பதாக கண்டுபிடிப்பு!  

அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் MDH சாம்பார் மசாலாவில் வயிற்றுபோக்கை ஏற்படுத்தும் சல்மோனெல்லா பாக்டீரியா இருந்தது அந்நாட்டு உணவுத்துறை அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

MDH என்ற நிறுவனம் மிளகாய்தூள் , சாம்பார் பொடி உள்ளிட்ட பல்வேறு மசாலா பொருட்களை பல நாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட சாம்பார் மசாலா பொடியில் பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கரோலினா மாகாணத்திலுள்ள கடைகளில் சோதனை நடத்திய உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சாம்பார் மசாவில்  உணவை விஷமாக மாற்றும் தன்மை கொண்ட சல்மோனல்லா பாக்டீரியா இருப்பதை கண்டறிந்தனர்.  

MDH

இந்த பாக்டீரியா உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து,காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இதையடுத்து MDH மசாலா பொருட்களுக்கு அமெரிக்காவில் தடை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. MDH சாம்பார் மசாலாக்கள் இந்தியாவிலும் விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.