ஆசை யாரை விட்டது… 100 நாளில் பணம் இரட்டிப்பு என்று ஆன்லைனில் மோசடி! கோடிக் கணக்கில் ஏமாற்றிய அவலம்

 

ஆசை யாரை விட்டது… 100 நாளில் பணம் இரட்டிப்பு என்று ஆன்லைனில் மோசடி! கோடிக் கணக்கில் ஏமாற்றிய அவலம்

ஆயிரம் சிட், சீட்டு கம்பெனி மோசடி நடந்தாலும் நம் மக்களை திருத்தவே முடியாது என்று கூறுவது போல ஒரு சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. ஆன்லைன் ஏமாளிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த மோசடியில் பல கோடி கணக்கான ரூபாய் பறிபோனதாகப் பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர்.

ஆயிரம் சிட், சீட்டு கம்பெனி மோசடி நடந்தாலும் நம் மக்களை திருத்தவே முடியாது என்று கூறுவது போல ஒரு சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. ஆன்லைன் ஏமாளிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த மோசடியில் பல கோடி கணக்கான ரூபாய் பறிபோனதாகப் பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை அரும்பாக்கத்தில் ட்ரீ இந்தியா எக்ஸ்ட்ரீம் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தை வெங்கடேசன், சையது, ஹரீஷ் உள்பட ஆறு பேர் நடத்தி வந்துள்ளனர். இவர்கள் தங்கள் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால், நூறே நாளில் பணம் இரட்டிப்பாகிவிடும் என்று விளம்பரம் செய்துள்ளனர்.

cheating

இப்படி பலர் இரட்டிப்பு லாபம் பெற்று மகிழ்ச்சியாக உள்ளதாக போலியாக விளம்பரம் தயாரித்து பதிந்துள்ளனர். இதை உண்மை என்று நம்பிய நெட்டிசன்கள் சிலர், இவருடைய நிறுவனத்தில் பணத்தைக் கொட்டியுள்ளனர். ஒருவர் இருவர் இல்லை… இப்படி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணத்தை செலுத்தியுள்ளார்கள்.
வழக்கம்போல பணம் சேர்ந்ததும் பணத்தை சுருட்டிக்கொண்டு வெங்கடேசன் உள்ளிட்டோர் தலைமறைவாகினர். நூறு நாளில் டபுள் மடங்கு பணம் கிடைக்கும் என்று ஆசையிலிருந்தவர்களுக்கு இது பேரிடியாக இருந்தது. இதனால், முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் தமிழ்நாடு டி.ஜி.பி, சென்னை மாநகர போலீசில் எல்லாம் புகார் அளித்தனர்.

fir

இந்த போலி நிறுவனத்தை நடத்திவந்த ஹரீஷ் என்பவர் திருவொற்றியூரில் வசிப்பதாக பணத்தை கொடுத்து ஏமாந்தவர்களுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, பணத்தைத் திரும்பத் தரும்படி ஹரிஷ் வீட்டை முற்றுகையிட்டனர் ஏமாந்தவர்கள்.
கூட்டத்தைப் பார்த்து பயந்த ஹரீஷ் தன் வீடு தேடி வந்து பலர் மிரட்டுவதாக காவல்துறை கட்டுப்பட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசார் அவரது வீட்டுக்கு வரவே, பணத்தைக் கொடுத்து ஏமாந்தவர்கள் அங்கிருந்து மாயமாகினர். மிரட்டல் தொடர்பாக திருவொற்றியூர் போலீஸில் புகார் அளிக்கும்படி பேட்ரோலில் வந்த போலீசார் தெரிவித்தனர்.

people

இதன்படி அவர் திருவொற்றியூர் போலீஸ் நிலையம் வந்தார்.
வீட்டில் தகராறு செய்தால் பிரச்னையாகும் என்பதால் ஹரீஷ் போலீஸ்நிலையம் வரும் வரை காத்திருந்த பணம் கொடுத்து ஏமாந்தவர்கள், அவர் போலீஸ் நிலையம் வந்ததும் அங்கு ஒன்று கூடிவிட்டனர். இதை எதிர்பாராத ஹரீஷ் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றார். ஆனால், அவரை விடாமல் துரத்திச் சென்று பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.
பின்னர் போலீசில், பணம் இரட்டிப்பாக தரப்படும் என்று ஆன்லைனில் விளம்பரம் செய்து ஹரிஷ் உள்ளிட்டவர்கள் ஏமாற்றியது தொடர்பாகவும் இது குறித்து டி.ஜி.பி, முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு அளித்த புகார்களையும் காட்டியுள்ளனர். இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள ஐந்து பேரைப் பற்றி விசாரித்து வருகின்றனர்.

fraud

நோகாமல் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த சம்பவம் ஒரு பாடமாக இருக்கும். ஆனாலும் ஆயிரம் சம்பவங்களைப் பார்த்தாலும் நம்முடைய மக்களின் ஆசையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இதுபோன்ற ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் புதுப்புது ரூபத்தில், புதுப்புது வடிவத்தில் ஏமாற்றிக்கொண்டேதான் இருப்பார்கள்.