ஆசை காட்டி ஏமாற்றிய பங்கு வர்த்தகம்….. ரூ. 52 ஆயிரம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்…. சென்செக்ஸ் 131 புள்ளிகள் வீழ்ந்தது….

 

ஆசை காட்டி ஏமாற்றிய பங்கு வர்த்தகம்….. ரூ. 52 ஆயிரம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்…. சென்செக்ஸ் 131 புள்ளிகள் வீழ்ந்தது….

இன்று இந்திய பங்குச் சந்தைளில் வர்த்தகம் பெரிய ஏற்றத்தை காட்டி விட்டு சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 131 புள்ளிகள் வீழ்ந்தது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று ரூ.1.70 லட்சம் கோடி நிதியுதவி திட்டங்களை அறிவித்தார். இன்று காலையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு அதிகரித்தது. ரிசர்வ் வங்கி முக்கிய கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்தது. அன்னிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்தது குறைந்தது போன்ற காரணங்களால் காலையில் பங்கு வர்த்தகம் விறுவிறுவென ஏற்றம் கண்டது. ஆனால் ரிசர்வ் வங்கியின் கூட்டம் முடிவடைந்தபிறகு பங்கு வர்த்தகம் ஏற்றம் சரிவு காண தொடங்கியது. இறுதியில் பங்குச் சந்தைகளில் ஒன்று சரிவுடனும், ஒன்று ஏற்றத்துடனும் முடிவடைந்தது.

இந்திய ரிசர்வ் வங்கி

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஆக்சிஸ் வங்கி, ஐ.டி.சி., என்.டி.பி.சி., மகிந்திரா அண் மகிந்திரா மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உள்பட 13 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. பஜாஜ் பைனான்ஸ், ஹீரோமோட்டோகார்ப், இண்டஸ்இந்த் வங்கி மற்றும் பார்தி ஏர்டெல் உள்பட 17 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

ஹீரோமோட்டோகார்ப்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,142 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,166 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 173 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.112.51 லட்சம் கோடியாக சரிந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.52 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் புள்ளிகள் 131.18  சரிந்து 29,815.59 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 18.80 புள்ளிகள்  உயர்ந்து 8,660.25 புள்ளிகளில் நிலைகொண்டது.