ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி வென்ற தருண் அய்யாச்சாமிக்கு தமிழக அரசு ஊக்கத் தொகை அறிவிப்பு

 

ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி வென்ற தருண் அய்யாச்சாமிக்கு தமிழக அரசு ஊக்கத் தொகை அறிவிப்பு

சென்னை: 2018 ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி வென்ற தமிழக வீரர் தருண் அய்யாச்சாமிக்கு தமிழக அரசு ஊக்கத் தொகை அறிவித்துள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டியில் நேற்று நடந்த ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்திய வீரர் தருண் அய்யாச்சாமி வெள்ளிப்பதக்கம் வென்றார். இவர் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள ராவுத்தம்பாளையத்தை சேர்ந்தவர் ஆவார். விவசாயியான இவரது தந்தை அய்யாசாமி பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அங்குள்ள மெட்ரிகுலேசன் பள்ளியில் ஆசிரியையாக வேலைபார்க்கும் அவரது தாயார் பூங்கொடி தான் தருணையும், அவரது தங்கை சத்யாவையும் வளர்த்து வருகிறார்.

கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியில் இருவரையும் வளர்த்து வருவதுடன், விளையாட்டில் இருவருக்கும் தாயார் பூங்கொடி ஊக்கம் அளித்து வருகிறார். இந்நிலையில், 2018 ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி வென்ற தமிழக வீரர் தருண் அய்யாச்சாமிக்கு தமிழக அரசு ரூ.30 லட்சம் ஊக்கத் தொகை அறிவித்துள்ளது. மேலும் தருணுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.