ஆசிய கோப்பை கிரிக்கெட் சூப்பர் 4 சுற்று: இந்தியா – ஆப்கானிஸ்தான் இன்று பலப்பரீட்சை

 

ஆசிய கோப்பை கிரிக்கெட் சூப்பர் 4 சுற்று: இந்தியா – ஆப்கானிஸ்தான் இன்று பலப்பரீட்சை

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில், இந்திய அணி, ஆப்கானிஸ்தானை இன்று எதிர்கொள்கிறது.

துபாய்: ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில், இந்திய அணி, ஆப்கானிஸ்தானை இன்று எதிர்கொள்கிறது.

14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு நாடுகளான துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில், லீக் போட்டிகளின் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன.

சூப்பர்-4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும். சூப்பர்-4 சுற்றில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி இந்திய அணி ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்நிலையில், தனது கடைசிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை இந்தியா அணி இன்று எதிர்கொள்கிறது. ஆப்கானிஸ்தான் அணி அடுத்தடுத்து 2 ஆட்டங்களில் போராடி தோல்வியைத் தழுவி இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்துள்ளது. எனவே சம்பிரதாய ஆட்டமாக நடைபெறும் இப்போட்டி துபாயில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. இப்போட்டியில் ஆறுதல் வெற்றிக்காக ஆப்கானிஸ்தான் ணி போராடும் என தெரிகிறது.

சூப்பர்-4 சுற்றில் நாளை நடைபெறும் கடைசிப் போட்டியில் பாகிஸ்தான் – வங்கதேசம் அணிகள் மோதவுள்ளன. இதில், வெற்றிபெறும் அணி வருகிற 28-ம் தேதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.