ஆங்கில வார்த்தைகளை வாசிக்க திணறிய ஆசிரியை! நாடு உருப்புட்டுரும்… 

ஆங்கில வார்த்தைகளை வாசிக்க திணறிய ஆசிரியை! நாடு உருப்புட்டுரும்… 

உத்திரபிரதேசத்திலுள்ள பள்ளி ஒன்றில் பாடப்புத்தகதிலிருந்த ஆங்கில வார்த்தைகளை வாசிக்க முடியாமல் ஆசிரியை ஒருவர் உயரதிகாரிகளிடம் மாட்டிக்கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது. 

உத்திரபிரதேசத்திலுள்ள பள்ளி ஒன்றில் பாடப்புத்தகதிலிருந்த ஆங்கில வார்த்தைகளை வாசிக்க முடியாமல் ஆசிரியை ஒருவர் உயரதிகாரிகளிடம் மாட்டிக்கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது. 

teacher

உத்தரபிரதேசத்திலுள்ள பள்ளிகளில் ஏதாவது பிரச்னைகளும், மதிய உணவுகளில் ஏற்படும் சர்ச்சைகளும் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில்  உன்னாவ் மாவட்டம் ஷிகந்த்பூரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் தேவேந்திர குமார் ஆய்வுக்கு சென்றிருக்கிறார்.  அப்போது திடீரென வகுப்பறைக்குள் சென்ற தேவேந்திரகுமார், ஆங்கில ஆசிரியையை அழைத்து அவரிடம் ஆங்கில பாடப்புத்தகத்தை கொடுத்து மாணவர்களுக்கு புரியும்படி வாசிக்க சொன்னார். ஆனால் அந்த ஆசிரியை வாசிக்க முடியாமல் திணறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆங்கிலத்தில் ஒரு வார்த்தைக்கூட வாசிக்க முடியாதவர் எப்படி புத்தகம் முழுவதுமுள்ள பாடங்களை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுப்பார் என அதிர்ச்சியில் மூழ்கினார் மாவட்ட ஆட்சியர். இதையடுத்து ஆசிரியையின் படிப்புச் சான்றிதழ்களை ஆய்வு செய்தபோது அவர், போலி சான்றிதழின் மூலம் ஆசிரியையானது தெரியவந்தது. உடனடியாக அந்த ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்ய  பள்ளிக் கல்வித்துறைக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.