ஆக, உங்க உட்கட்சி ஜனநாயகம் எங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்கு

 

ஆக, உங்க உட்கட்சி ஜனநாயகம் எங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்கு

திமுக இளைஞரணிச் செயலாளராக இருந்து ராஜினாமா செய்து உதயநிதிக்கு வழிவிட்டிருக்கிறார் சாமிநாதன். திடீரென தேனி நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, வெற்றியும்பெற்று, ஒரே மாதத்தில் சூப்பர் சீனியராக உயர்ந்துவிட்ட ப. ரவீந்திரநாத் அதிர்ஷம் அளவுக்கு உதயநிதிக்கு இல்லை என்பதையும் இங்கே பதிவுசெய்தாக வேண்டும்.

திமுக இளைஞரணிச் செயலாளராக தன் முப்பதாவது வயதில் பதவியேற்ற மு.க.ஸ்டாலின் 34 வருடங்கள் அப்பொறுப்பில் இருந்தார். உதயநிதி முதிர்-இளைஞன் ஆகும்வரை ஸ்டாலின்வசம் இருந்த அப்பொறுப்பு, அதன்பின் வெள்ளக்கோவில் சாமிநாதனிடம் சென்றது. கடந்த 2017 ஜூனில் அப்பொறுப்புக்கு வந்த சாமிநாதன், இரண்டு வருடங்களுக்குப் பிறகு அப்பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இளைஞரணிச் செயலாளராக நீடிப்பதற்கு சாமிநாதனின் வயது தடையாக இருக்கும், அதனால் அவர் ராஜினாமா செய்கிறார் என்றெல்லாம் நம்பிவிடாதீர்கள். வேறெதற்கு, திடீர் ராஜினாமா? ஆமாம் அதற்குத்தான். அவருக்குத்தான்.

Stalin

கட்சி பொறுப்புகளைப் பொறுத்தவரை திமுகவிற்கும் அதிமுகவிற்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். ஜெயலலிதா இருந்தவரை, இன்றைக்கு நாம் பொறுப்பில் இருக்கிறோமா அல்லது அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டிருக்கிறோமா என்பதை நமது எம்.ஜி.ஆர். பார்த்துத்தான் அதிமுக நிர்வாகிகள் தெரிந்துகொள்வார்கள். ஜெயலலிதாவுக்குப் பிறகு, பிரச்னை வேறுமாதிரி. தலைமை பதவிகளில் இருப்பவர்களே, இன்றைக்கும் நாம் பதவியில் இருக்கிறோமா இல்லையா என்பதை டெல்லிக்கு போன்பண்ணித்தான் தெரிந்துகொள்கிறார்கள். அவர்கள் பிரச்னை அப்படியிருக்க, திமுகவோ வேறுமாதிரி.

Vellakovil Saminathan

இன்னாரை ஒரு பொறுப்புக்கு கொண்டுவரவேண்டுமென்றால், ஏற்கெனவே அப்பொறுப்பில் இருப்பவர் மனமுவந்து அப்பொறுப்பினை திடீரென ராஜினாமா செய்வார். இன்னார் பொறுப்புக்கு வரவேண்டும் என்பதை அறிவாலய‌ அன்னார் ஏற்கெனவே முடிவெடுத்திருப்பார் என்பது வேறு விஷயம். ராஜினாமா செய்கிறவரும் மனமுவந்துதான் செய்வாரா என்பது கேள்விக்குரியது. ஆக, திமுக இளைஞரணிச் செயலாளராக இருந்து ராஜினாமா செய்து உதயநிதிக்கு வழிவிட்டிருக்கிறார் சாமிநாதன். திடீரென தேனி நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, வெற்றியும்பெற்று, ஒரே மாதத்தில் சூப்பர் சீனியராக உயர்ந்துவிட்ட ப. ரவீந்திரநாத் அதிர்ஷ்டம் அளவுக்கு உதயநிதிக்கு இல்லை என்பதையும் இங்கே பதிவுசெய்தாக வேண்டும்.