ஆக்‌ஷனில் இறங்கிய முதல்வர்! ரூ.1,650 கோடி மோசடி!  ஐஏஎஸ்., ஐபிஎஸ்., ஐ.ஜி வீடுகளில் சி.பி.ஐ. சோதனை!

ஆக்‌ஷனில் இறங்கிய முதல்வர்! ரூ.1,650 கோடி மோசடி!  ஐஏஎஸ்., ஐபிஎஸ்., ஐ.ஜி வீடுகளில் சி.பி.ஐ. சோதனை!

தமிழகத்தில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்று ஒவ்வொரு முறையும் மக்கள் சொல்லி வருவார்கள். யார் ஆட்சிக்கு வந்தாலும், அவர்களுக்கு முன்பாக ஆட்சி செய்தவர்களின் ஊழல் பட்டியலை கையில் வைத்துக் கொண்டு முதல் மூன்று வருடங்களுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாகவே இருக்கும் என்பது மக்களின் பொதுவான கருத்தாக இருந்து வருகிறது.

fraud

தற்போது திகார் சிறையில் இருக்கும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விஷயத்திலும், பழி வாங்கும் நடவடிக்கை என்று தான் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் சொல்லி வருகிறார்கள். ஆனால், பழைய விவகாரங்களைத் தோண்டு எடுக்கும் போது, பூதகரமான விவகாரமாக வெளிப்படுவதும் உண்டு. இப்படித் தான் பெங்களூருவில் நகைக்கடை நடத்தி வந்த மன்சூர்கான் என்பவர், முதலீடு செய்யும் பணத்திற்கு அதிகவட்டி தருவதாக ஆசைக்காட்டி ரூ.1,650 கோடியுடன் துபாய்க்கு தப்பிச் சென்றார். இந்த வழக்கை சிறப்பு விசாரணை குழு விசாரிக்க அப்போதைய பெங்களூரு அரசு உத்தரவிட்டது. அமலாக்கத்துறையும் தாமாகவே முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. அதன் பின்னர், துபாயில் இருந்து பெங்களூரு திரும்பிய மன்சூர்கானை அமலாக்கத் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.  லஞ்சம் வாங்கியதாக பெங்களூரு மாவட்ட கலெக்டர் விஜய்சங்கர் உள்பட சில அரசு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர்.

ediyurappa

இந்த நிலையில்,  பெங்களூருவில் ஆட்சி கவிழ்ந்து, முதல்-மந்திரியாக  எடியூரப்பா அரசு அமைந்ததும், இந்த மோசடி குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய விசாரணையில், பல அரசு அதிகாரிகளுக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கின. இதையடுத்து, போலீஸ் ஐ.ஜி, ஐ.பி.எஸ். அதிகாரிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரி உள்பட 9 பேரின் வீடு, அலுவலகங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். நேற்று முழுவதும், பெங்களூருவில் 11 இடங்கள் உட்பட மொத்தம் 15 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.