ஆக்லாந்தில் நாளை முதல் டி20 போட்டி – நியூசிலாந்தை வீழ்த்துமா இந்திய அணி?

 

ஆக்லாந்தில் நாளை முதல் டி20 போட்டி – நியூசிலாந்தை வீழ்த்துமா இந்திய அணி?

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் நாளை நடைபெறுகிறது.

மும்பை: இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் நாளை நடைபெறுகிறது.

அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை இந்திய அணி வென்றது. இதையடுத்து நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு மூன்று ஒருநாள் போட்டிகள், ஐந்து டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. தோள்பட்டை காயம் காரணமாக இத்தொடரில் இருந்து ஷிகர் தவான் விலகியுள்ளார். அவருக்கு மாற்றாக டி20 போட்டிகளுக்கு சஞ்சு சாம்சனும், ஒருநாள் போட்டிகளுக்கு பிரித்வி ஷாவும் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இவ்விரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி ஆக்லாந்தில் நாளை இந்திய நேரப்படி மதியம் 12.20 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு வருவதால் ரி‌ஷப் பண்டுக்கு விளையாட வாய்ப்பு  கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதேபோல இப்போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா என்பது குறித்தும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள்!