ஆக்கிரமிப்புகளை அகற்றிய‌ அதிகாரியை கிரிக்கெட் பேட்டால் பொளந்த பாஜக எம்.எல்.ஏ!

 

ஆக்கிரமிப்புகளை அகற்றிய‌ அதிகாரியை கிரிக்கெட் பேட்டால் பொளந்த பாஜக எம்.எல்.ஏ!

பணியில் இருக்கும் அதிகாரியை பாஜக எம்.எல்.ஏ. கிரிக்கெட்டால் தாக்கப்படும் வீடியோ வைரலாகியிருக்கிறது. விரைவில் அந்த தொகுதியின் எம்.பியாகும் வாய்ப்பிருக்கிறது ஆகாஷுக்கு. பின்னே? பாஜக ஒரு வித்தியாசமான கட்சிப் பாருங்க!

பாரதிய ஜனதா கட்சியினருக்கு ஜனநாயகம், நீதிமன்றம், சட்டத்தின் மாண்பு குறித்தெல்லாம் எந்த கவலையும் கிடையாது போல. தொண்டர்கள்முதல் எம்.எல்.ஏ. எம்.பிக்கள்வரை சட்டத்தை சட்டைப்பையிலேயே எடுத்துக்கொண்டு அலைவார்கள் போல. மத்திய பிரதேசம், இந்தூரில் பொது இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்திருக்கிறார் ஒரு கார்ப்பரேஷன் அதிகாரி. செய்தியறிந்து உடனடியாக இடத்திற்கு வந்திருக்கிறார் சம்பந்தப்பட்ட தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ. ஆகாஷ் விஜய்வர்கியா.

BJP MLA attacking officer

நேராக அதிகாரியிடம் சென்று “எதற்காக ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறீர்கள்” என்று கேட்க, அதற்கு அதிகாரி “அவை ஆக்கிரமிப்புகள், அதனால் அகற்றுகிறோம்” என சிம்பிளாக சொல்லிவிட்டு வேலையை பார்த்திருக்கிறார். ஆகாஷுக்கு வந்ததே கோவம். கையில் வைத்திருந்த கிரிக்கெட் பேட்டால் அந்த அதிகாரியை விடாமல் தாக்க துவங்கியிருக்கிறார். பணியில் இருக்கும் ஒரு அரசு அதிகாரியை எம்.எல்.ஏ. ஒருவர் பொது இடத்தில் தாக்குவதைப் பார்த்த மீடியா நண்பர்கள், உடனடியாக இதனை வீடீயோ எடுக்கத் துவங்க, ‘செஞ்சுரி போட்டே ஆகவேண்டும்’ என்ற வேகத்தில் தொடர்ந்து வேகமாக தாக்கத்துவங்கியிருக்கிறார். பணியில் இருக்கும் அதிகாரியை பாஜக எம்.எல்.ஏ. கிரிக்கெட்டால் தாக்கப்படும் வீடியோ வைரலாகியிருக்கிறது. விரைவில் அந்த தொகுதியின் எம்.பியாகும் வாய்ப்பிருக்கிறது ஆகாஷுக்கு. பின்னே? பாஜக ஒரு வித்தியாசமான கட்சிப் பாருங்க!