ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்யலாம்- வருமான வரித்துறை

 

ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்யலாம்- வருமான வரித்துறை

2018-2019 நிதியாண்டுக்கான வருமான வரியைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நிதி அமைச்சகம் நீட்டித்து அறிவித்துள்ளது.

2018-2019 நிதியாண்டுக்கான வருமான வரியைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நிதி அமைச்சகம் நீட்டித்து அறிவித்துள்ளது.

இன்னும் 8 நாட்களில் அதாவது இம்மாதம் 31-ஆம் தேதிக்குள் 2018-19ஆம் நிதியாண்டுக்கான  வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என வருமான வரித்துறை தெரிவித்திருந்தது. அப்படி செய்யவில்லை என்றால் அபராதம் வசூசுலிக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தது. இந்நிலையில் மத்திய அரசு அதை 2019 ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. பல பட்டய கணக்கர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்த அமைப்புகள் வருமான வரி தாக்கல் செய்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. எனவே அதற்கான காலக்கெடுவை நீட்டித்தால் சரியான விவரங்களை அளித்து வருமான வரி தாக்கல் செய்ய உதவும் என்று வருமான வரித்துறைக்குக் கோரிக்கை வைத்து வந்தனர். இதனை கருத்தில் கொண்டு ஆகஸ்ட் 31 வரை நீட்டித்துள்ளது. 

ஆண்டு வருமானம் 5 லட்சத்துக்குள் உள்ளவர்கள், வருமான வரி கணக்கை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது. 31-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யவில்லை என்றால், செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 31-ஆம் தேதி தாக்கல் செய்ய ரூ. 1,000 அபராதமாக செலுத்த நேரிடும் என்றும், ஆண்டு வருமானம் 5 லட்சத்துக்கும் மேல் உள்ளவர்கள், 31-ஆம் தேதி தாக்கல் செய்ய தவறினால், ரூ. 5,000 அபராதமாக செலுத்த நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.