ஆகஸ்ட் 15 பரபரப்பு |ஒரே நாளில் 52 ரவுடிகள் கைது! 

ஆகஸ்ட் 15 பரபரப்பு |ஒரே நாளில் 52 ரவுடிகள் கைது! 

குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடிகளை கைது செய்யும்படி காவல்துறை துணைத் தலைவர் பிரதீப் குமார் உத்தரவிட்டதை அடுத்து, நேற்று ஒரு நாளில் மட்டும் போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு சேலத்தில் 52 ரவுடிகளை கைது செய்துள்ளனர். 

காவல்துறை துணைத் தலைவரின் உத்தரவை அடுத்து, தனிப்படையினர் தீவிரமான விசாரணை நடத்தி சேலத்தில் மேட்டூர், கருமலைகூடல், ஜலகண்டாபுரம், ஓமலூர் மற்றும் கெங்கவல்லி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடிகள் பூபதி மற்றும் பிரசாத் கோபி, சசிக்குமார் ரத்தினவேல், பிரகாஷ் உட்பட 52 பேரை நேற்று ஒரே நாளில் கைது செய்தனர்.
இத்தனை ரவுடிகளையும் இதுநாள் வரையில் கண்டுக் கொள்ளாமல் இருந்த காவல் துறையினர் திடீரென இவர்களை இத்தனை பரபரப்பாகவும், அவசரமாகவும் தேடிப்பிடித்து கைது செய்திருப்பது சேலம் மக்களிடையே நிம்மதி பெருமூச்சு விட வைத்திருக்கிறது.

அதே சமயத்தில், ‘ரவுடிகள் இருக்கும் இடங்களைத் தெரிந்து வைத்துக் கொண்டும் இத்தனை நாட்கள் மாமூல் வாங்கிக் கொண்டு மெத்தனமாகவே இருந்த போலீசாருக்கு மக்களிடையே மரியாதையும் போய் விட்டது. இப்போ இப்படி அதிரடியாய் கைது செய்யுறாங்கன்னா ஆக்ஸ்ட் 15 முடிஞ்சதும் இவங்களே ராஜ மரியாதையோட திரும்பவும் வெளியில விட்டுடுவாங்க… அப்படியெல்லாம் செய்யாம நேர்மையா இருந்தாலே சேலத்துல வழிப்பறி, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து எல்லாம் காணம போயிடும்’ என்றும் மக்கள் பேசிக் கொண்டார்கள்.