’அ.ம.மு.க.வுல டிடிவி தினகரனைத் தவிர வேற யாராவது இருக்காய்ங்களா பாஸ்?’…ரன்னே எடுக்காமல் சரியும் விக்கெட்டுகள்…

’அ.ம.மு.க.வுல டிடிவி தினகரனைத் தவிர வேற யாராவது இருக்காய்ங்களா பாஸ்?’…ரன்னே எடுக்காமல் சரியும் விக்கெட்டுகள்…

அமமுகவின் தூண்களில் ஒன்றான தங்கத் தமிழ்ச் செல்வனை அடியோடு சாய்த்து முடித்திருக்கும் நிலையில் அக்கட்சியின் இன்னொரு முக்கிய பிரமுகரான
 பழனியப்பனை திமுகவுக்கு இழுக்கும் வகையில் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் பேசியதாக ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

palaniappan

லோக்சபா மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களில் படுதோல்விக்குப் பின்னர் தினகரனின் கூடாரம் மிக வேகமாகக் காலியாகி வருகிறது. அமமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன், தினகரனை ஆபாசமாக விமர்சித்த ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் தங்க தமிழ்ச்செல்வனை அமமுகவில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளார் தினகரன்.  தனது அடுத்த கட்ட நகர்வு குறித்து தங்கத் தமிழ்ச் செல்வன் எதுவும் அறிவிக்காகாமல் சஸ்பென்ஸ் கொடுத்துவரும் நிலையில் அவர் அதிமுக, அல்லது திமுகவுக்குத்  தாவக் கூடும் என கூறப்பட்டு வருகிறது. 

thangatamilselvan

இந்நிலையில் தினகரனின் வலதுகரமாக இருக்கும் பழனியப்பனை திமுக வளைத்துவிட்டதாக ஒருதகவல். இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனே பழனியப்பனிடம் பேரம் பேசியதாக ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதில்,‘நீங்கள் திமுகவுக்கு வாருங்கள். நீங்கள் சொல்பவருக்கு அல்லது உங்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்கிறோம். மேலும் உங்கள் மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் நான்கு சட்டமன்றத் தொகுதிகளை உங்களிடம் ஒப்படைக்கிறோம். அதற்கு நீங்களே வேட்பாளர்களைத் தேர்வுசெய்து, தேர்தல் செலவுகளையும் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்’என கூறப்பட்டிருக்கிறதாம். இந்த தகவல் அமமுக வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. போகிற போக்கைப்பார்த்தால் தினகரனைத் தவிர அக்கட்சியில் யாரும் மிஞ்சமாட்டார்களோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

palaniappan

இன்னொரு பக்கம் மற்ற கட்சி ஆட்களை உள்ளே இழுப்பதற்காக திமுக கொடுக்கும் ஆஃபர்களைக் கேட்டு உடன்பிறப்புகள் கொந்தளிப்பில் உள்ளார்களாம். ‘புதுசா வர்றவங்களுக்கு இஷ்டத்துக்கு பதவிகளை அள்ளிக்கொடுத்தா ஏற்கனவே இருக்கவங்க ஓ.சி.பிரியாணி சாப்பிட்டே காலத்தைத் தள்ளவேண்டியதுதானா?’ என்று சற்று உரக்கவே புலம்புகிறார்களாம்.