‘அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போடாதீங்க’ : ராமதாஸின் உச்சகட்ட காமெடி; பாவம் அவரே கன்ஃப்யூஸ் ஆகிட்டாரு போல…?!

 

‘அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போடாதீங்க’ : ராமதாஸின் உச்சகட்ட காமெடி; பாவம் அவரே கன்ஃப்யூஸ் ஆகிட்டாரு போல…?!

அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் போது திமுக, அதிமுக கூட்டணிக்கு ஓட்டு போடாதீர்கள் என்றும் பாமக கட்சி தலைவர் ராமதாஸ் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆரணி: அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் போது திமுக, அதிமுக கூட்டணிக்கு ஓட்டு போடாதீர்கள் என்றும் பாமக கட்சி தலைவர் ராமதாஸ் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

தேர்தல் பரப்புரை

admk dmk

மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பணியில் அரசியல் கட்சிகள் வேகம் காட்டி வருகிறது. இதனால் அதிமுக திமுக உள்ளிட்ட இதர கட்சிகள்  தேர்தல் பணியில் மும்முரம் காட்டி  வருகின்றனர்.  தேர்தல் பரப்புரையின் போது, வாக்குறுதிகள், அதிமுக- திமுக காரசார விவாதங்கள் அனைத்தையும் தாண்டி, சில சுவாரசியமான சம்பவங்களும் நடந்து வருகின்றன. 

சில சுவாரசியங்கள் 

sellur raju

அதில் குறிப்பாக,ராமனுக்கு சீதை போல், எம்.ஜி.ஆருக்கு ஜானகி போல், விஜயகாந்த்துக்கு பிரேமலதா என்று ராஜேந்திர பாலாஜி பேசியது, திமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் கட்டுக்கடங்காமல் தூங்கி வழிந்தது, அமைச்சர் செல்லூர் ராஜு, தாண்டியா நடனம் ஆடியது என்று சிலவற்றைச் சொல்லலாம். ஆனால்  இதையெல்லாம் தாண்டி, உச்சக்கட்ட சுவாரசியம் எதுவென்று கேட்டால், அது அண்மையில் பேசிய ராமதாஸின் பேச்சு தான். 

ராமதாஸின் உச்சக்கட்ட காமெடி 

ramadoss

ஆம். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அதிமுக கூட்டணி கட்சியான பாமகவின்  நிறுவனர்  ராமதாஸ், அதிமுக  வேட்பாளார் செஞ்சி சேவல் ஏழுமலை என்பவரை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் களமிறங்கினார். 

அப்போது பேசிய அவர், ‘எந்தக் காரணத்திற்கும்  திமுக, அதிமுகவிற்கு ஓட்டு போடாதீர்கள் என்று கூறினார். இது அங்கிருந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உண்மையில் அவர் பேச நினைத்தது, திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு ஓட்டு போடாதீங்க’ என்றுதான். ஆனால் தவறுதலாக திமுக அதிமுகவுக்கு என்று கூறிவிட்டார். இதனால் அங்கிருந்த  அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.

அய்யா கூறியதில் என்ன தவறு இருக்கிறது?

ramadoss

உண்மையில் ராமதாஸ் பேசியதில் என்ன தவறு இருக்கிறது. நெடுநாட்களாக, திமுக அதிமுகவுக்கு ஓட்டு போடாதீர்கள். திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று கூறி வந்த ராமதாஸ் & கோ, திடீரென்று  தங்கள் கொள்கையிலிருந்து நழுவி, அதிமுகவின் கையை பற்றி கொண்டது. என்ன தான் இப்போது கூட்டணிக் கட்சியாக இருந்தாலும், ராமதாஸின் உள்மனதில், அதிமுக திமுக குறித்த விமர்சனங்கள் இன்னும் இருக்கத்தானே செய்யும். அது தான் இப்படி பொது மேடையில் அதிமுகவினர் மத்தியிலேயே வெளிப்பட்டுள்ளது  என்று பாமகவில் அதிருப்தியில் இருக்கும் சில தொண்டர்கள் கருத்து கூறி வருகின்றனர். 

என்ன இருந்தாலும், ராமதாஸ் அய்யா உங்களுக்கு ரொம்ப தைரியம் தான் போங்க…!

இதையும் வாசிக்க: பண்ணை வீட்டில் விருந்து, திமுக கூட்டணியில் இருந்து வெளியே வர சொன்னார் ராமதாஸ்: திருமா கொடுத்த அதிர்ச்சி தகவல்!