அ.தி.மு.க-விலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன்: தி.மு.க-வுக்கு ஆதரவு!

 

அ.தி.மு.க-விலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன்: தி.மு.க-வுக்கு ஆதரவு!

மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிமுகவிலிருந்து விலகியுள்ளார்.

சென்னை: மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிமுகவிலிருந்து விலகியுள்ளார்.

அ.தி.மு.க –  தி.மு.க கட்சி தாவல்:

1996 வரை ஜெயலலிதா அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் ராஜ கண்ணப்பன் இதையடுத்து அதிமுகவிலிருந்து விலகி,  மக்கள் தமிழ்தேசம் என்ற தனிக்கட்சி தொடங்கிய அவர், பின்னர் திமுகவில் இணைந்து இளையான்குடி எம்எல்ஏவானார். அதன்பின் அங்கிருந்தும் விலகி மீண்டும் அதிமுகவில் சேர்ந்தார். 

சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரத்திடம்  தோல்வி

கடந்த 2009 மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட ராஜ கண்ணப்பன் முன்னாள் நிதியமைச்சர்  ப.சிதம்பரத்திடம்  தோல்வி கண்டார்.  2011-ல்  சட்டப்பேரவைத் தொகுதியில் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட ராஜா கண்ணப்பன், முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பனிடம் தோல்வியடைந்தார். தற்போது  நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில்,  ராஜ கண்ணப்பன், சிவகங்கை அல்லது ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட முயற்சி மேற்கொண்டார். ஏனெனில் சிவகங்கை தொகுதியில் அவர் சமூகத்தைச் சார்ந்த மக்கள் பெரும் வாரியாக இருப்பதால், அதை ராஜ கண்ணப்பன் டாக்கெட் செய்ததாகக் கூறப்படுகிறது.

விலகலும், ஆதரவும்!

இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிமுகவிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து  திமுக கூட்டணிக்கு  ராஜகண்ணப்பன் ஆதரவு அளிக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். இதை தொடர்ந்து, இன்று மாலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து ஆதரவு தெரிவிக்கிறார்.

சீட் கொடுக்காத விரக்தி, பா.ஜ.க தான் காரணமா?

முன்னதாக மக்களவை தேர்தலில் போட்டியிட  ராஜகண்ணப்பன் கேட்டிருந்த சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய இரு தொகுதிகளை, அதிமுக தலைமை, பாஜகவுக்கு அளித்ததால் விரக்தியடைந்த ராஜகண்ணப்பன், அதிருப்தியில் அதிமுகவிலிருந்து விலகியுள்ளதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.