அ.தி.மு.க முன்னாள் எம்.பி கோபாலன் திடீர் மறைவு!

 

அ.தி.மு.க முன்னாள் எம்.பி கோபாலன் திடீர் மறைவு!

அ.தி.மு.க சார்பில் மாநிலங்களை உறுப்பினராக இருந்தவர் ஆர்.டி.கோபாலன். கம்பம் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ-வாகவும் இவர் இருந்துள்ளார். உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்

அ.தி.மு.க முன்னாள் எம்.பி ஆர்.டி.கோபாலன் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். 
அ.தி.மு.க சார்பில் மாநிலங்களை உறுப்பினராக இருந்தவர் ஆர்.டி.கோபாலன். கம்பம் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ-வாகவும் இவர் இருந்துள்ளார். உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆர்.டி.கோபால் நேற்று இரவு 9.45 மணிக்கு காலமானார் என்று அவரது உறவினர்கள் அறிவித்துள்ளனர். 
இவர் எம்.ஜி.ஆர் காலத்தில் கம்பம் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்துள்ளார். அதன் பிறகு 1986 முதல் 1992ம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார். இவருடைய மகன் தற்போது அ.ம.மு.க-வில் உள்ளார். ஆர்.டி.கோபாலன் மறைவுக்கு அ.தி.மு.க-வினர் அ.ம,மு.க-வினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.