அ.தி.மு.க- தி.மு.க.,வுக்கு ஆப்பு… தமிழகத்தை அடியோடு மாற்றப்போகும் பா.ஜ.க..!

 

அ.தி.மு.க- தி.மு.க.,வுக்கு ஆப்பு… தமிழகத்தை அடியோடு மாற்றப்போகும் பா.ஜ.க..!

2026ல், பா.ஜ., தலைமையில் ஆட்சி அமைப்பது லட்சியம். இது தான் தற்போதைய திட்டம். இந்த திட்டத்தை நோக்கி தமிழக பா.ஜ.க செயல்படும்.

அ.தி.மு.க – தி.மு.க – ரஜினி ஆரம்பிக்கப்போகும் கட்சி இந்த மூன்றில் ஏதாவது ஒன்றுடன் சேர்ந்து வரும் 2021 சட்டசபை தேர்தலில், 60 தொகுதிகளில் போட்டியிட தமிழக பா.ஜ.க திட்டமிட்டுள்ளது.

தமிழக பா.ஜ.க தலைவர்பதவியை கைப்பற்ற தங்களுக்கு வேண்டிய  மேலிட தலைவர்களை சந்தித்து  தமிழக நிர்வாகிகள் ஆதரவு திரட்டி வருகின்றனர். சமீபத்தில் டெல்லியில் பா.ஜ.க மேலிட தலைவர் ஒருவரை முன்னாள் எம்.பி. பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து தனக்கு மாநில தலைவர் பதவி தரும்படிகேட்டுள்ளார்.modi

அப்போது ‘மாஜி’யிடம் மேலிட தலைவர் கூறிய தகவல் குறித்து கட்சி வட்டாரங்கள், ‘’கடந்த மக்களவை தேர்தலில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் மகன், ஓ.பி.ரவீந்திரநாத்குமார் போட்டியிட்ட தேனி தொகுதியில் பிரதமர் மோடி சாதனைகளை விளக்கி பிரசாரம் செய்ததால், அவர் வெற்றி பெற்றார். ஆனால், அ.தி.மு.க வின் மற்ற வேட்பாளர்கள் பிரதமர் மோடியின் சாதனைகளை விளக்கி பிரசாரம் செய்யவில்லை. அதனால் தான் அவர்கள் வெற்றி வாய்ப்பை இழந்தனர். கடந்த, 2014 மக்களவை தேர்தலில் பா.ஜ.க, போட்டியிட்ட தொகுதிகளில் பெற்ற ஓட்டுகள் 2019 மக்களவை தேர்தலிலும் கிடைத்துள்ளன.

எனவே இது, பிரதமர்மோடியின் செல்வாக்கிற்கு கிடைத்த ஓட்டுகள் என்பது நிரூபணமாகி உள்ளது. வரும் 2021ல், தமிழகசட்டசபை தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது என்பது அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யப்படும். அ.தி.மு.க – தி.மு.க -ரஜினி கட்சி ஆகிய மூன்றில் ஏதாவது ஒரு கட்சியுடன் பா.ஜ., கண்டிப்பாக கூட்டணி அமைக்கும். கூட்டணியில் பா.ஜ., போட்டியிட 75 சட்டசபை தொகுதிகள் கேட்கப்படும்.

modi

குறைந்தபட்சம் 60 தொகுதிகள் பெறப்படும். அதில் 40 தொகுதிகளில் வெற்றி பெறுவது இலக்கு. அடுத்த 2026ல், பா.ஜ., தலைமையில் ஆட்சி அமைப்பது லட்சியம். இது தான் தற்போதைய திட்டம். இந்த திட்டத்தை நோக்கி தமிழக பா.ஜ.க செயல்படும். கூட்டணியில் பெறுகிற தொகுதிகளில் பாதி பா.ஜ.கவினருக்கு வழங்கப்படும்.

மீதமுள்ள தொகுதிகள் அ.தி.மு.க – தி.மு.க. காங்கிரஸ் போன்ற மாற்று கட்சிகளிலிருந்து பா.ஜ.கவை நம்பி வருகிற பிரபலங்களுக்கு தரப்படும். அதற்கு முன் வன்னியர், முத்தரையர், நாடார், தேவேந்திரகுல வேளாளர் மற்றும் கிறிஸ்துவர், இஸ்லாமியர் போன்ற சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த கட்சி தலைவர்களை பா.ஜ.கவில் சேர்க்க வேண்டும். இந்தப் பணிகளை சரிவர செய்பவர்களுக்கு பதவி தேடி வரும்.

rajini

பா.ஜ.கவில் உழைப்பவர்களுக்கு எப்போதும் அங்கீகாரம் கிடைக்கும். மாற்று கட்சிகளிலிருந்து வருபவர்களுக்கு கட்சியில் உரிய அங்கீகாரமும், தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பும் வழங்கப்படும் என பாஜக திட்டமிட்டுள்ளது.