அ.தி.மு.க, தி.மு.கவோடு கூட்டணி வைக்கும் எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை!-மது பிரியர்கள் எச்சரிக்கை!? 

 

அ.தி.மு.க, தி.மு.கவோடு கூட்டணி வைக்கும் எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை!-மது பிரியர்கள் எச்சரிக்கை!? 

பாராளுமன்ற தேர்தலில் அடுத்து யார் ஆட்சியைப் பிடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும்,கூட்டணி கட்சிகளின் ‘தொகுதி பங்கீடு’மாக பரபரத்துக்கிடக்கிறது அரசியல் களம்.

பாராளுமன்ற தேர்தலில் அடுத்து யார் ஆட்சியைப் பிடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும்,கூட்டணி கட்சிகளின் ‘தொகுதி பங்கீடு’மாக பரபரத்துக்கிடக்கிறது அரசியல் களம். இதில் சில தேசிய காட்சிகள்,மாநில கட்சிகள் நாங்கள் யாருடனும் கூட்டணி இல்லை என்றும்,தனித்து போட்டியிடுவோம் என்று களத்தில் இருக்கும் பிரதான காட்சிகளை கதற விட்டுக்கொண்டிருக்கிறது சில காட்சிகள்.

அந்த கட்சிகளெல்லாம் யார்…அவர்களின் ‘மொத்த’ உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும் என்பது சோசியல் மீடியாவில் இருக்கும் பலருக்கும் தெரிந்திருக்கும்.அந்த காமெடி காட்சிகளை…மன்னிக்கணும், கட்சிகளெல்லாம் ஒண்ணுமே இல்லை என்று சொல்கிற அளவுக்கு ஒரு சங்க தலைவர்,நேற்று கொடுத்த அறிக்கை கூட்டணி கட்சிகளின் ‘பிரேக்கிங்’ நியூஸ்களால் பின்னுக்கு தள்ளப்பட்ட செய்தி இன்றுதான் தெரியும்.அதுக்காக அப்படியே விட்டுவிட முடியுமா!

தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர், செல்லப்பாண்டியன் தான் அப்படியொரு எச்சரிக்கையை விடுத்திருக்கிறார். அவர்கள் சொல்கிறது ரொம்ப சிம்பிளான கோரிக்கைதான்! ‘அய்யா, வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க,அ.தி.மு.க கூட்டணியில் சேரும் எந்தக் கட்சியோடும் தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சேராது;ஆதரிக்காது! 61.4% டாஸ்மாக் பிரியர்களின் நலனை காக்கும் கட்சிகளோடு மட்டுமே கூட்டணி சேரும்.இல்லையேல், தனித்தே தேர்தலை சந்திக்கும்.’

steatement

ஆளுங்கட்சி கூட்டணிக்கும்,எதிர்க்கட்சி கூட்டணிக்கும் இப்படியொரு நெருக்கடி நிலை வரும் என்று எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை! இந்த பாராளுமன்ற தேர்தலில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்று தெரிகிறது!