அ.தி.மு.க சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுவை அளிக்கலாம்: ஒ.பி.எஸ், இ.பி.எஸ் கூட்டறிக்கை

 

அ.தி.மு.க சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுவை அளிக்கலாம்: ஒ.பி.எஸ், இ.பி.எஸ் கூட்டறிக்கை

அ.தி.மு.கவின் சார்பாக தேர்தலில் போட்டியிட விருப்பப்படுவோர்  தலைமை செயலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர் செல்வமும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். 

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டியின் இடைத்தேர்தல் அக்டோபர் 21 ஆம் தேதி என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து, அ.தி.மு.கவின் சார்பாக தேர்தலில் போட்டியிட விருப்பப்படுவோர்  தலைமை செயலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர் செல்வமும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். 

OPS and EPS

மேலும், நாளை(22/09/2019)  காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், நாளை மறுநாள்(23/09/2019) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை, விண்ணப்பத் தொகை ரூ.25,000 செலுத்தி விண்ணப்பப் படிவத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும், பூரித்தி செய்த படிவங்களை திங்கட்கிழமை (23/09/2019) மாலை 3 மணிக்குள் தலைமைச் செயலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. வேட்பாளருக்கான நேர்காணல் 23 ஆம் தேதி நடைபெறும் என அ.தி.மு.க அறிவித்ததாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.