அ.தி.மு.க எம்எல்ஏ மகன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

 

அ.தி.மு.க எம்எல்ஏ மகன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

செய்தியாளர்களைத் தாக்கியதாக அதிமுக எம்.எல்.ஏ.வின் மகன் உள்பட நான்கு பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

ஈரோடு : செய்தியாளர்களைத் தாக்கியதாக அதிமுக எம்.எல்.ஏ.வின் மகன் உள்பட நான்கு பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

laptop

ஈரோடு குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்சி நடைபெற்றது. இந்த விழாவில்  சட்டமன்ற உறுப்பினர்கள் ராமலிங்கம் மற்றும் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது சில மாணவர்களுக்கு மடிக்கணினி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பள்ளியில் மாணவர்களின் பெற்றோர்கள்  சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

erode

இந்த செய்தி அப்பகுதியில் பரவ இதுகுறித்து செய்தி சேகரிக்கச் சென்ற இரண்டு செய்தியாளர்களைச் சட்டமன்ற உறுப்பினர் கே.வி ராமலிங்கத்தின் மகனும் மாவட்ட அதிமுக மாணவரணி செயலாளருமான ரத்தன்பிரத்வி  உள்பட சிலர் அவர்களை செய்தி சேகரிக்க விடாமல் தடுத்ததோடு, அவர்களை தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த செய்தியாளர்கள்  இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையில் புகாரளிக்கப்பட்டது. மேலும் இதற்கு  பத்திரிகையாளர்கள் சங்கங்கள் மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். 

இந்நிலையில்  ஈரோடு வடக்கு காவல்நிலைய போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏ ரத்தன் பிரத்வி உள்பட அதிமுகவினர் 4 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.