அ.தி.மு.க அமைச்சரால் குனிய முடியவில்லை என்பது நம்பும்படி இல்லை!- மு.க.அழகிரி ட்வீட்

 

அ.தி.மு.க அமைச்சரால் குனிய முடியவில்லை என்பது நம்பும்படி இல்லை!- மு.க.அழகிரி ட்வீட்

திண்டுக்கல் சீனிவாசனால் குனிய முடியவில்லை என்று கூறுவது நம்பும்படி இல்லை என்று மு.க.அழகிரி பெயரில் உள்ள ட்வீட் பக்கத்தில் ட்வீட் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் சீனிவாசனால் குனிய முடியவில்லை என்று கூறுவது நம்பும்படி இல்லை என்று மு.க.அழகிரி பெயரில் உள்ள ட்வீட் பக்கத்தில் ட்வீட் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மு.க.அழகிரி பெயரில் உள்ள ட்விட்டர் அக்கவுண்டில் இருந்து ஒரு படத்துடன் கூடிய ட்வீட் வெளியாகி உள்ளது. அதில், சிறுவனை செருப்பை கழற்றச் சொன்ன படத்தையும், சசிகலா காலில் விழும் படத்தையும் சேர்த்துப் பதிவிட்டுள்ளனர். 

alagiri

சிறுவனை செருப்பைக் கழற்றச் சொன்ன படத்தில், இதுக்கு குனியாத முதுகு என்று குறிப்பிடப்பட்டள்ளது. சசிகலாவின் காலில் விழுவதுபோன்று திண்டுக்கல் சீனிவாசன் குனிந்திருக்கும் படத்தில், “இதுக்கு மட்டும் குனியுதோ?” என்று உள்ளது. நிலைத் தகவலில், “ஒரு அ.தி.மு.க அமைச்சரால் குனிய முடியவில்லை என்றால் நம்புகின்ற மாதிரியா இருக்கு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது மு.க.அழகிரியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமா என்று தெரியவில்லை. இருப்பினும் அழகிரி அ.தி.மு.க அமைச்சர்களை தாக்கி பதிவிட்டதாக பலரும் இதை ரீட்வீட் செய்து வருகின்றனர்.

ஜெயலலிதாவின் காலில், அவர் பயணிக்கம் வாகனத்தின் டயரை தொட்டு வணங்குவது அ.தி.மு.க நிர்வாகிகளின் வழக்கமாக இருந்தது. இதனை கிண்டல் செய்யும் வகையில் மு.க.ஸ்டாலின் ட்வீட் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.