அஸ்ஸாமைத் தொடர்ந்து உ.பி மீரட்டிலும் இணைய சேவைக்குத் தடை!

 

அஸ்ஸாமைத் தொடர்ந்து உ.பி மீரட்டிலும் இணைய சேவைக்குத் தடை!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில் மீரட், அலிகாரில் இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் போராட்டில் குதித்துவருகின்றனர்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில் மீரட், அலிகாரில் இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் போராட்டில் குதித்துவருகின்றனர்.

protest

இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் உள்ள அலிகார் பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டத்தில் இறங்குவதைத் தடுக்க பல்கலைக் கழகத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. விடுதியிலிருந்து மாணவர்களை வெளியேற்றி வருகின்றனர். மேலும், அலிகாரில் தொலைத்தொடர்பு, இணைய சேவைகளும் நிறுத்தப்பட்டன.

college

இதேபோல், சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி மீரட் நகரிலும் இணைய சேவைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 10 மணி வரை இணைய சேவை ரத்து செய்யப்படுவதாக மாவட்ட மாஜிஸ்திரேட் அணில் தங்கரா அறிவித்துள்ளார்.
அலிகார் இஸ்லாமிய பல்கலைக் கழகம் ஜனவரி 4ம் தேதி வரை மூடப்படுகிறது. தேர்வுகள் அதன் பிறகே நடத்தப்படும். நிலைமை சீரடைவதைப் பொறுத்து இணைய சேவை துண்டிப்பு விலக்கப்படுமா அல்லது நீட்டிக்கப்படுமா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.