அவெஞ்சர்ஸ் சாதனையை முறியடித்த சர்கார்: 5 மணி நேரத்தில் மட்டும் 10 லட்சம் பேர் லைக்!

 

அவெஞ்சர்ஸ் சாதனையை முறியடித்த சர்கார்: 5 மணி நேரத்தில் மட்டும் 10 லட்சம் பேர் லைக்!

சர்கார் டீசர் வெளியான 5 மணி நேரத்தில் மட்டும் 10 லட்சம் பேர் லைக் செய்ததுடன், ஒரு கோடி பேர் யூடியூப்பில் பார்த்துள்ளதன் மூலம் அவெஞ்சர்ஸ் திரைப்படத்தின் சாதனையை சர்கார்  முறியடித்துள்ளது.

சென்னை: சர்கார் டீசர் வெளியான 5 மணி நேரத்தில் மட்டும் 10 லட்சம் பேர் லைக் செய்ததுடன், ஒரு கோடி பேர் யூடியூப்பில் பார்த்துள்ளதன் மூலம் அவெஞ்சர்ஸ் திரைப்படத்தின் சாதனையை சர்கார்  முறியடித்துள்ளது.

நடிகர் விஜய் – முருகதாஸ் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் சர்கார். இந்தப் படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளார். மேலும் வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, ராதாரவி, யோகிபாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். படத்தில் இடம்பெற்றிருக்கும் அனைத்துப் பாடல்களையும்  பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

 

இந்நிலையில் நேற்று மாலை இந்தப் படத்தின்  வெளியாகி டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. சர்கார் டீசர் வெளியான 5 மணி நேரத்தில் மட்டும் 10 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். ஹாலிவுட் திரைப்பட டீசர் அவெஞ்சர்ஸ் 36 மணி நேரத்தில் 10 லட்சம் லைக்களை பெற்ற சாதனையை சர்கார் டீசர் முறியடித்துள்ளது.

டீசர் வெளியான 5 மணி நேரத்தில் ஒரு கோடி பேர் யூடியூப்பில் கண்டுள்ளனர். சர்கார் திரைப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வருவது  குறிப்பிடத்தக்கது.