அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்திற்கு ஆப்படித்த தமிழ் ராக்கர்ஸ்

 

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்  படத்திற்கு ஆப்படித்த தமிழ் ராக்கர்ஸ்

உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் லீக்கானதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது. 

சென்னை: உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் லீக்கானதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது. 

ஒரு திரைப்படம் தயாரித்து வெளியிடுவதற்குள் படகுழுக்கு போதும் போதும் என்று ஆகிவிடுகிறது. ஆனால் அவர்கள் பட்ட கஷ்டத்திற்குப் பயனில்லாமல், முதல் காட்சி முடிவதற்குள்ளேயே அந்த படம் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகி தயாரிப்பாளரின் தலையில் இடியை இறக்கும். இந்த இணையதளத்தை முடக்க பல்வேறு வகையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது ஆனால் அனைத்துமே தோல்வியில் தான் முடிகிறது. 

avengers

இந்த நிலையில் உலகமே எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. ஆனால் படம் வெளியாகும் முன்பே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியானதால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

avengers

இருப்பினும் பல கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் திருட்டுத்தனமாக வெளியானாலும், படத்தை கண்டிப்பாக தியேட்டர் சென்று தான் பார்ப்போம் என்று மார்வெல் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.