அவர் வந்த நேரம் விஞ்ஞானிகளுக்கு துரதிர்ஷ்டம்! மோடியை தாக்கிய கர்நாடக முன்னாள் முதல்வர்…

 

அவர் வந்த நேரம் விஞ்ஞானிகளுக்கு துரதிர்ஷ்டம்! மோடியை தாக்கிய கர்நாடக முன்னாள் முதல்வர்…

இஸ்ரோவின் ஆய்வு மையத்தில் அவர் காலடி வைத்தவுடன் விஞ்ஞானிகளுக்கு துரதிர்ஷ்டமாக மாறியது என நினைக்கிறேன் என பிரதமர் மோடியை கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமி தாக்கி பேசினார்

நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்யும் நோக்கில் சந்திரயான் 2வை கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி விண்ணில் ஏவியது இஸ்ரோ. திட்டமிட்டப்படி சந்திரயான் 2 தனது பயணத்தை தொடர்ந்தது. கடந்த சனிக்கிழமை அதிகாலை நேரத்தில் நிலவில் களம் இறங்கும் என எதிர்பார்த்த நேரத்தில், நிலவின் மேற்பரப்புக்கு 2.1 கி.மீ. தொலைவில் சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் இறங்கும்போது இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் சந்திரயான் 2 மிஷன் பின்னடைவை சந்தித்தது.

சந்திரயான் 2

சந்திரயான் 2 நிலவில் இறங்குவதை பார்க்க பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் ஆய்வு மையத்துக்கு வந்து இருந்தார். சந்திரயான் 2 பின்னடைவை சந்தித்தாலும் இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டி பேசினார். மேலும் கண்ணீர் விட்டு அழுத இஸ்ரோவின் தலைவர் சிவனுக்கு கட்டிபிடித்து ஆறுதல் கூறினார்.

மோடி

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி  தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், சந்திரயான் 2 மிஷன் பின்னடைவுக்கு மோடிதான் காரணம் என்பதுபோல் கூறியுள்ளார். செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள டிவிட்டரில், மைசூரில் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறியது: பிரதமர் பெங்களூரு வந்தார். தானே சந்திரயானை நிலவில் இறக்குவதாக தகவல் தெரிவித்தார். சந்திரயான் 2-க்கா விஞ்ஞானிகள் 10 முதல் 12 ஆண்டுகள் கடுமையாக உழைத்தனர். அவர் வெறும் விளம்பரத்துக்காக அங்கு வந்தார். அவர் (மோடி) இஸ்ரோ மையத்தில் காலடி வைத்தவுடன், விஞ்ஞானிகளுக்கு துரதிர்ஷ்டமாக மாறியது என நினைக்கிறேன்.  என அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.