அவர் இல்லாததை ஏற்று கொள்ளவே முடியவில்லை; கம்பீர் காட்டம் !!

 

அவர் இல்லாததை ஏற்று கொள்ளவே முடியவில்லை; கம்பீர் காட்டம் !!

இந்திய அணியில் விஜய் சங்கர், சாஹல், குல்தீப் யாதவ் போன்ற இளம் வீரர்கள் பலர் இடம்பெற்றிருந்தாலும், அம்பத்தி ராயூடு போன்ற வீரர்கள் கழட்டிவிடப்பட்டது கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் அம்பத்தி ராயூடுவிற்கு வாய்ப்பு கொடுக்காததை தன்னால் இன்று வரை ஏற்று கொள்ளவே முடியவில்லை என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். 
கிரிக்கெட் உலகின் வல்லரசை தீர்மானிக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்  நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. 

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 30ம் தேதி துவங்க நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் விஜய் சங்கர், சாஹல், குல்தீப் யாதவ் போன்ற இளம் வீரர்கள் பலர் இடம்பெற்றிருந்தாலும், அம்பத்தி ராயூடு போன்ற வீரர்கள் கழட்டிவிடப்பட்டது கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

அம்பி ராய்ட்

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவு தவறானது என பலமுறை பேசிய கவுதம் கம்பீர், தற்பொழுது மீண்டும் ஒருமுறை பி.சி.சி.ஐ.,யை கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “புள்ளி விபரங்களை பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை, அதனை மட்டும் நம்புவன் நான் அல்ல. அம்பத்தி ராயூடு இல்லாததை என்னால் இன்று வரை ஏற்று கொள்ளவே முடியவில்லை. யார் என்ன சொன்னாலும் என்னால் அதனை ஏற்று கொள்ளவே முடியாது. எதன் அடிப்படையில் பி.சி.சி.ஐ., அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்று தற்பொழுது வரை புரியவில்லை” என்றார்.