அவர்லாம் ஒரு ஆளே இல்லை… வேலையை பாருங்க… கூட்டணியில் இருந்து கழற்றி விடும் எடப்பாடி..!

 

அவர்லாம் ஒரு ஆளே இல்லை… வேலையை பாருங்க… கூட்டணியில் இருந்து கழற்றி விடும் எடப்பாடி..!

அதேநேரத்தில் கிருஷ்ணசாமி, ரஜினியுடன் அவர் பேசி வருகிறாராம். இதனால், அதிமுகவை கழட்டி விட்டுவிட்டு ரஜினி, பாஜ கூட்டணிதான் சரி என அவர் பிரசாரத்தை தொடங்க இருப்பதாக சொல்கிறார்கள்.

இடைத்தேர்தலில் புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி அதிமுகவுக்கு ஆதரவளிக்காமல் விலகி இருக்கிறார். காரணம், டெல்லி தலையிட்டும் எடப்பாடியிடம் அவர் கேட்டது ஒன்றும் நடக்கவில்லை.

நேரடியாக சந்தித்து பேசினால் சத்தமில்லாமல் முடியாத காரியங்களை செய்து கொடுக்கும் எடப்பாடியார், சவால் விட்டால் அவர்களுக்கு தலைகீழாக நின்றால் கூட எதையும் செய்து தர மாட்டாராம். அந்த வகையில் கூட்டணி கட்சிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் உள்பட பல்வேறு தரப்பினருக்கு வெளியே  சொல்ல முடியாத பல்வேறு உதவிகளை தாராளமாக செய்துள்ளார்.

edappadi

ஆனால், கிருஷ்ணசாமி எதிர்பார்ப்பே வேறு. ’’ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் சீட் கொடுத்ததே பெரிய விஷயம். அதுலேயே உங்களால ஜெயிக்க முடியல. அதனால நீங்கள்  கேட்பதை தர முடியாது’ என்று மறுத்துவிட்டாராம் எடப்பாடி. 

இடைத்தேர்தலில் அவரிடம் யாரும் ஆதரவு கேட்டு தூதும் செல்லவில்லை. நம்மை கட்சி தலைவராகவே மதிக்கவில்லை என கிருஷ்ணசாமிக்கு கடும் கோபம். எனவே, நாங்குநேரி,  விக்கிரவாண்டியில் அவர்களுக்கு ஆதரவு தரக்கூடாது என்று அறிவித்தாராம். அதையும் மோடி தமிழகத்துக்கு வரும் நிலையில் அறிவித்தால் பெரிதாக பேசப்படும் என்று எதிர்பார்த்தாராம். 

krishnasamy

ஆனால் எல்லோரும் இந்திய-சீன தலைவர்கள்  வருகையில் பிஸியாக இருப்பதால் கிருஷ்ணசாமியின் அதிரடியை யாரும் கண்டுகொள்ளவில்லை. இதையெல்லாம் மறைக்கவே அரசாணையை ஒப்புக் கொண்டபடி எடப்பாடி வெளியிடவில்லை. எனவே, அதிமுகவுக்கு ஆதரவு இல்லை என்று  வெடித்துள்ளார் கிருஷ்ணசாமி. 

அதேநேரத்தில் கிருஷ்ணசாமி, ரஜினியுடன் அவர் பேசி வருகிறாராம். இதனால், அதிமுகவை கழட்டி விட்டுவிட்டு ரஜினி, பாஜ கூட்டணிதான் சரி என அவர் பிரசாரத்தை தொடங்க இருப்பதாக சொல்கிறார்கள்.