அவரு ஒப்புதல் மட்டும்தான் தாங்க கொடுத்தார்! சிதம்பரத்துக்கு வக்காலத்து வாங்கும் மன்மோகன் சிங்

 

அவரு ஒப்புதல் மட்டும்தான் தாங்க கொடுத்தார்! சிதம்பரத்துக்கு வக்காலத்து வாங்கும் மன்மோகன் சிங்

ஐ.என்.எக்ஸ். மீடியாவுக்கு அரசு அதிகாரிகளின் ஒருமித்த பரிந்துரைக்குதான் ஒப்புதல் கொடுத்தார் இது எப்படி ப.சிதம்பரத்தின் தவறாகும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

2007ல் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு சுமார் ரூ.300 கோடி அன்னிய முதலீடு வந்தது. இந்த அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்து இருப்பதாக புகார் எழுந்தது.  ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடந்த 5ம் தேதி முதல் திஹார் சிறையில் உள்ளார். அவரை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் நேற்று சிறைக்கு சென்று அவரை சந்தித்தனர்.

ப சிதம்பரம்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்களது சகா சிதம்பரம் தொடர்ந்து காவலில் இருப்பதால் நாங்கள் கவலை கொண்டுள்ளோம். இந்த வழக்கில் நீதிமன்றம் நீதியை வழங்கும் என நாங்கள் மிகுந்த உறுதியாக மற்றும் நம்பிக்கையுடன் உள்ளோம். நமது அரசாங்கத்தில் எந்தவொரு முடிவும் தனிமனிதரால் எடுக்க முடியாது. அனைத்து முடிவுகளும் கூட்டாக எடுக்கப்படும்.

சோனியா காந்தி, மன்மோகன் சிங்

அரசாங்கத்தின் 6 செயலளர்கள் உள்பட 12க்கும் மேற்பட்ட அதிகாரிகள் விண்ணப்பத்தை ஆய்வு செய்து பரிந்துரை செய்தனர். அந்த ஒருமித்த பரிந்துரைக்கு சிதம்பரம் ஒப்புதல் கொடுத்துள்ளார். அதிகாரிகள் தவறு செய்யவில்லை என்றால், பரிந்துரைக்கு வெறுமனே ஒப்புதல் கொடுத்த அமைச்சர் ஒரு குற்றத்தை செய்ததாக எவ்வாறு குற்றம் சாட்ட முடியும் என்பது நமது புரிதலுக்கு அப்பாற்பட்டது. ஒரு பரிந்துரையை அங்கீகரிப்பதற்கு அமைச்சர் பொறுப்பேற்றால் அரசாங்கத்தின் முழு அமைப்பு சிதைந்து விடும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.