அவமானத்தால் திருமணம் ஆன ஒரே மாதத்தில் தூக்கில் தொங்கிய இளம்பெண்: அதிர வைக்கும் சம்பவம்!

 

அவமானத்தால் திருமணம் ஆன ஒரே மாதத்தில் தூக்கில் தொங்கிய இளம்பெண்: அதிர வைக்கும் சம்பவம்!

தந்தையிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதை தொடர்ந்து ராதா தாய் வீட்டிலிருந்து வந்துள்ளார்.

சென்னை ஆவடி அருகே உள்ள சி.ஆர்.பி.எப். பிருந்தாவன் நகரைச் சேர்ந்தவர் ராஜா. இவருக்கு ராதா என்ற மகள்  உள்ளார்.  தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த  ராதாவும், சாலிகிராமத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவரும் கடந்த  ஓராண்டாகக் காதலித்து வந்துள்ளனர்.  இவர்களின் காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவர இவர்கள் காதலுக்கு  எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையடுத்து கடந்த மாதம் வீட்டை விட்டு  வெளியேறி   திருமணம் செய்து கொண்டனர். 

love

திருமணமான ஓரிரு நாட்களிலேயே பாலாஜி குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து  வந்துள்ளார். மேலும் ராதாவின் நடத்தையில் சந்தேகப்பட்டுள்ளார். இதனால் ராதா மன உளைச்சலில்  இருந்துள்ளார். இதையடுத்து பாலாஜியின் தந்தை முஸ்தபா, எங்கள் மகளுக்கு திருமணம்  செய்த பிறகு உங்கள்  மகளை முறைப்படி திருமணம் செய்து அழைத்து செல்கிறோம் என்று ராதாவின் தந்தையிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதை தொடர்ந்து ராதா தாய் வீட்டிலிருந்து வந்துள்ளார். 

harassment

ஆனால்  காதல் மனைவியுடன் பேசுவதை பாலாஜி நிறுத்தியுள்ளார். இதனால் ராதா கணவரை பார்க்க அவரது வீட்டுக்கு செல்ல ஆத்திரமடைந்த அவரது கணவர் பாலாஜி மற்றும் மாமனார் முஸ்தபா இருவரும் அவரை அடித்து அவமானப்படுத்தியுள்ளனர்.  இதனால் மனமுடைந்த ராதா வீட்டில் அனைவரும் தேவாலயம் சென்றிருந்த நிலையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

avadi

தேவாலயம் சென்றிருந்த ராதாவின் பெற்றோர் வீட்டுக்கு வந்த போது  அவர் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தகவலறிந்து சென்ற ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், ராதாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதுகுறித்து திருவள்ளூர் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

திருமணமான ஒரு மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.