அவனியாபுரம் ஜல்லிக்கட்டு…கூட்டத்தில் பாய்ந்த காளைகள்; 21 பேர் படுகாயம்!

 

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு…கூட்டத்தில் பாய்ந்த காளைகள்; 21 பேர் படுகாயம்!

பார்வையாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, வாடிவாசலில் இருந்து 8 அடி உயரத்தில் இரட்டை அடுக்கு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கமாகும். குறிப்பாக மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகள் உலக புகழ் பெற்றவை. அந்த வகையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி  இன்று காலை 8 மணிக்கு உறுதிமொழி எடுக்கப்பட்டு துவங்கிய  இந்த  ஜல்லிக்கட்டு போட்டி மாலை  4 மணிவரையிலும் நடைபெறவுள்ளது.

ttn

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் 700 காளைகளை பிடிக்க, 730 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டையொட்டி 1500 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பார்வையாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, வாடிவாசலில் இருந்து 8 அடி உயரத்தில் இரட்டை அடுக்கு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.

ttn

இந்நிலையில் ஜல்லிக்‍கட்டில் காளைகள் முட்டியதில் இதுவரை 21  காயமடைந்தனர். அவர்களில் 4 பேர் மேல் சிகிச்சைக்‍காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்‍கு அனுப்பி வைக்‍கப்பட்டனர். வாடிவாசலில் இருந்து வெளிவரும் காளை  கூட்டத்தில் பாய்வதால் காயமடைந்தவர்களின்  எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.