அழைத்தற்கு நன்றி….. ஆனால் இந்தியாவை விட்டு இப்பம் வரமாட்டோம்…. சொந்த நாட்டுக்கு செல்ல விரும்பாத அமெரிக்கர்கள்

 

அழைத்தற்கு நன்றி….. ஆனால் இந்தியாவை விட்டு இப்பம் வரமாட்டோம்…. சொந்த நாட்டுக்கு செல்ல விரும்பாத அமெரிக்கர்கள்

கொரோனா வைரஸால் அமெரிக்கா அல்லோகப்படுவதால், இந்தியாவில் வசிக்கும் அந்நாட்டை சேர்ந்த சுமார் 24 ஆயிரம் பேர் அங்கு செல்ல விரும்பாமல் இங்கேயே தங்கியிருக்க விரும்புகின்றனர்.

தொற்று நோயான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வருவதால் உலக நாடுகள் ஒவ்வொன்றும் மற்ற நாடுகளுக்கான போக்குவரத்தை துண்டித்து தங்களை தனிமைப்படுத்தி உள்ளன. அதேசமயம், மற்ற நாடுகளில் சிக்கி தவிக்கும் தங்களது சொந்த நாட்டவர்களை சிறப்பு விமானம் மூலம் அழைத்து வருகின்றனர்.

விமானம்

மத்திய அரசும் சீனா உள்ளிட்ட நாடுகளில் சிக்கி தவித்த இந்தியர்களை சிறப்பு விமானம் மூலம் மீட்டு அழைத்து வந்தது. அதேபோல் அமெரிக்காவும் மற்ற நாடுகளில் இருக்கும் அந்நாட்டவர்களை அழைத்து வர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் சுமார் 24 ஆயிரம் அமெரிக்கர்கள் வசித்து வருகின்றனர். 

கொரோனா வைரஸ்

இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் இங்கு வசிக்கும் அந்நாட்டவர்களை அழைத்து செல்லவதற்கான நடவடிக்கையில் களம் இறங்கினர். சிறப்பு விமானத்தில் அழைத்து செல்ல தயாராக இருப்பதாக அமெரிக்க தூதரக அதிகாரிகள் சுமார் 800 பேருக்கு முதலில் அழைப்பு விடுத்தனர். ஆனால் 10 பேர் மட்டுமே அதாவது 1.25 சதவீதம் பேர் மட்டுமே அமெரிக்காவுக்கு வர விரும்புவதாக பதில் அளித்தனர். அமெரிக்காவில் இதுவரை 5 லட்சம் பேருக்கு மேல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தொற்று நோய்க்கு 22 ஆயிரத்துக்கு மேல் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் கொரோனா தாண்டவமாடும் இந்த நேரத்தில் அங்கு செல்வதை காட்டிலும் இந்தியாவில் தங்கி இருப்பதுதான் பாதுகாப்பானாது என அந்நாட்டவர்கள் கருதுவதே இதற்கு காரணம்.