அள்ளி கொடுத்ததை திருப்பி வாங்கும் பங்குச் சந்தைகள்! சென்செக்ஸ் 504 புள்ளிகள் குறைந்தது

 

அள்ளி கொடுத்ததை திருப்பி வாங்கும் பங்குச் சந்தைகள்! சென்செக்ஸ் 504 புள்ளிகள் குறைந்தது

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் மிகவும் மோசமாக இருந்தது. சென்செக்ஸ் 504 புள்ளிகள் குறைந்தது.

அமெரிக்காவில் நிலவும் நிலையற்ற அரசியல் சூழ்நிலை, ஆசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறையும் என்ற அச்சம் போன்ற காரணங்களால் சர்வதேச நிலவரங்களும், நாளை செப்டம்பர் மாத பங்கு முன்பேர வர்த்தக கணக்கு முடிக்கப்படும் என்பதால் முதலீட்டாளர்கள் லாப நோக்கில் செயல்பட்டதாலும் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம் சரிவு

சென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவன பங்குகளில் பவர் கிரிட், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்  உள்பட 6 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேசமயம், ஸ்டேட் வங்கி, டாடா மோட்டார்ஸ், யெஸ் பேங்க், மாருதி, ஐ.டி.சி., மகிந்திரா அண்டு மகிந்திரா, எச்.டி.எப்.சி. நிறுவனம் மற்றும் டாடா ஸ்டீல் உள்பட 24 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 760 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,757 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. இருப்பினும், 128 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.146.87 லட்சம் கோடியாக குறைந்தது. நேற்று வர்த்தகம் முடிவடைந்தபோது நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.148.73 லட்சம் கோடியாக இருந்தது. ஆக கடந்த சில வர்த்தக தினங்களில் முதலீட்டாளர்களுக்கு லாபத்தை அள்ளி கொடுத்த பங்கு வர்த்தகம் இன்று ரூ.1.86 லட்சம் கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியது.

பங்கு வர்த்தகம் சரிவு

இன்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 503.62 புள்ளிகள் சரிந்து 38,593..52 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 148 புள்ளிகள் வீழ்ந்து 11,440.20 புள்ளிகளில் நிலை கொண்டது.