அளவு சரியில்லாததால் 1000 ரூபாய் சுடிதார் ரூ.26000! சிறுமிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

அளவு சரியில்லாததால் 1000 ரூபாய் சுடிதார் ரூ.26000! சிறுமிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

நெல்லையில் உள்ள ஒரு துணிக்கடை அளவு சரியில்லாத ஆடையை மாற்ற மறுத்த காரணத்திற்காக அந்த கடைக்கு அம்மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. 

நெல்லையில் உள்ள ஒரு துணிக்கடை அளவு சரியில்லாத ஆடையை மாற்ற மறுத்த காரணத்திற்காக அந்த கடைக்கு அம்மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. 

நெல்லை டவுனிலுள்ள துணிக்கடையில் 11 வயதான சிறுமி மகாலட்சுமிக்கு அவரது பெற்றோர் கடந்த 2017 ஆம் ஆண்டு தீபாவளிக்காக ரெடிமேட் சுடிதார் ஒன்றை வாங்கியுள்ளனர். ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அந்த சுடிதார் மகாலட்சுமிக்கு பொருந்ததாதது, வீட்டிற்கு சென்றவுடன் தான் தெரிந்தது. உடனடியாக மகாலட்சுமியின் தாய், அந்த கடைக்கு விரைந்து சென்று சுடிதாரை மாற்றித்தரும்படி கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் அதனை மாற்றித்தர அந்த கடை உரிமையாளர் மறுத்துவிட்டார். அதுமட்டுமின்றி மகாலட்சுமியின் தாயையும் அவதூறாக பேசியுள்ளார். 

துணிக்கடை

இதனால் ஆத்திரமடைந்த மகாலட்சுமி, தாய் மற்றும் வழக்கறிஞர் உதவியுடன் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், துணியை மாற்றிதர மறுத்த துணிக்கடை நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்ததோடு, சிறுமியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய காரணத்திற்காக் ரூ.25,000 ரூபாயும், உடைக்கான தொகை ஆயிரம் ரூபாயையும் வழங்க உத்தரவிட்டனர். ஒரு மாத காலத்திற்குள் வழங்க தவறினால் 6 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.