அளவுக்கு மிஞ்சிய தூக்கம் ஆயுளை குறைக்கும்! மக்களே உஷார்

 

அளவுக்கு மிஞ்சிய தூக்கம் ஆயுளை குறைக்கும்! மக்களே உஷார்

நாள் ஒன்றுக்கு 8 மணி நேரமாவது தூங்கினால் உடல் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும் என மருத்துவர்கள் அறிவுரைக்கூறி நாம் கேட்டிருப்போம். ஆனால் அளவுக்கு அதிகமாக தூங்கினால் ஆயுட்காலம் குறையும் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. 

தூக்கம்

‘தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே!’ன்னு பாட்டு பாடி வெச்சிருக்கோம். ஆனா எத்தனைப் பேர் படுக்கையில் படுத்ததும் அடுத்த நொடியில் தூங்கிப் போகிறோம்? எத்தனைப் பேர் இரவு முழுக்க தூக்கம் வரலைன்னு தவிச்சுக்கிட்டு ராத்திரி 1 மணிக்கு வாட்ஸ் -அப், பேஸ்புக்ன்னு மொபைலை பார்த்துக்கிட்டு இருக்கோம் என அனைவருக்குமே தெரிந்த விஷயம். ஆனால் நாள் ஒன்றுக்கு குறைந்தது 6 மணி முதல் 8 மணி வரை தூங்கினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும், எந்த நோயும் அண்டாது என்பது மருத்துவர்களின் கூற்று. 

தூக்கம்

இந்த அளவைவிட குறைவாக தூங்குபவர்களுக்கு 11 சதவீதம் இதய நோய் தாக்கும் வாய்ப்பு உள்ளதென்றால், தூங்கியே பொழுதை கழிப்பவர்களுக்கு அதைவிட 3 மடங்கு அதிகமாக, அதாவது 33 சதவீதம் இதய நோய் தாக்கும் வாய்ப்பு உள்ளது என சமீபத்தில் வெளியான ஆய்வுகள் தெரிவிக்கின்றனர். நாள் ஒன்றுக்கு 9 மணி நேரத்திற்கு மேல் தூங்கினால்  உடல் எடை அதிகரிப்பு, சர்க்கரை நோய், முதுகுவலி, பக்கவாதம் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்டு ஆயுட்காலம் குறையும் என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றனர்.