அல்ட்ராசோனிக் விரல்ரேகை சென்சாருடன் வெளியாகிறதா சாம்சங் கேலக்ஸி எஸ் 10?

 

அல்ட்ராசோனிக் விரல்ரேகை சென்சாருடன் வெளியாகிறதா சாம்சங் கேலக்ஸி எஸ் 10?

சாம்சங் கேலக்ஸி எஸ் 10 ஸ்மார்ட்போன் அல்ட்ராசோனிக் விரல்ரேகை சென்சாருடன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை: சாம்சங் கேலக்ஸி எஸ் 10 ஸ்மார்ட்போன் அல்ட்ராசோனிக் விரல்ரேகை சென்சாருடன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு முறை புதிய ஸ்மார்ட்போனை வெளியிடும்போதும் சாம்சங் நிறுவனம் ஏதாவது புதுமையான தொழில்நுட்பத்தை அதில் சேர்த்திருக்கும். அந்நிறுவனம் ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் பரிசோதனை முயற்சிகளை செய்ய ஒருபோதும் தயங்குவதில்லை. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், ஐரிஸ் ஸ்கேனர் அம்சத்துடன் வெளியான முதல் ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஆகும். தற்போது மடிக்க கூடிய போன்களை சாம்சங் நிறுவனம் தயாரித்து வருவதாகவும், அடுத்த சில வாரங்களில் அது அறிமுகம் செய்யப்படும் என்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது.

இந்நிலையில், சாம்சங் கேலக்ஸி எஸ் 10 ஸ்மார்ட்போனில் அல்ட்ராசோனிக் விரல்ரேகை சென்சார் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐரிஸ் ஸ்கேனருக்கு மாற்றாக இது அறிமுகமாகிறதாம். தற்போது மார்க்கெட்டில் உள்ள ஸ்மார்ட்போன்களின் இன்-டிஸ்பிளே சென்சாரை காட்டிலும் அதிக வேகமான மற்றும் துல்லியமானதாக இந்த தொழில்நுட்பம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓராண்டுக்கு முன்னர் இந்த அல்ட்ராசோனிக் விரல்ரேகை சென்சாரை குவால்காம் நிறுவனம் உருவாக்கியது. எனினும், இதுவரை அந்த தொழில்நுட்பம் எந்த ஸ்மார்ட்போனிலும் பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சாம்சங் கேலக்ஸி எஸ் 10 ஸ்மார்ட்போனில் இந்த சென்சார் இடம்பெற்றால், அல்ட்ராசோனிக் சென்சார் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக இதுவே இருக்கும். பிளாக்ஷிப் போனாக உருவாகியுள்ள கேலக்ஸி எஸ் 10 அடுத்த ஆண்டு நடக்கும் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் மாநாட்டில் அறிமுகம் செய்யப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.