அலோக் வர்மாவை உளவு பார்க்கும் உளவுத்துறை? : சிபிஐ விளக்கம்!

 

அலோக் வர்மாவை உளவு பார்க்கும் உளவுத்துறை? : சிபிஐ விளக்கம்!

சிபிஐ முன்னாள் இயக்குநர் அலோக் வர்மாவை உளவுத்துறை உளவு பார்க்கிறது என்ற தகவல் உண்மைக்குப் புறம்பானது என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி: சிபிஐ முன்னாள் இயக்குநர் அலோக் வர்மாவை உளவுத்துறை உளவு பார்க்கிறது என்ற தகவல் உண்மைக்குப் புறம்பானது என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தொழிலதிபர் மொயின் குரேஷி தொடர்பான ஒரு வழக்கில் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. அதேபோல், சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக ராகேஷ் அஸ்தானாவும் குற்றம் சாட்டியுள்ளார்.  நாட்டின் மிகப் பெரிய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் உயர்பதவி வகிக்கும் இருவரும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே அலோக் வர்மாவின் வீட்டிற்கு வெளியே சந்தேகத்திற்கு இடமாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது என தகவல்கள் வெளியாகியது. அலோக் வர்மாவை உளவுத்துறை கண்காணிக்கிறது என்றும் அலோக் வர்மா சிபிஐ-யின் வளையத்திற்குள் உள்ளார் என்றும் செய்திகள் பரவின. ஆனால் டெல்லி போலீஸ் கமிஷனர் மாதூர் வர்மா இதனை மறுத்தார். வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தவர்கள்  தான். ஆனால் வேறு விதமாகக் கதைகள் எழுப்பப்படுகிறது. டெல்லியின் உயர்மட்ட பாதுகாப்பு வளையத்தின் கீழ் வரும் பகுதிகளில் உளவுத்துறை பிரிவு வழக்கமாக நிலை நிறுத்தப்படும் என்றும்  உள்துறை அதிகாரிகள் விளக்கமளித்து உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.