அலுவலகத்துக்கு வர விருப்பம் இல்லையா? கடமைகளிலிருந்து விடுபடுங்க….பணியாளர்களுக்கு மத்திய அமைச்சகம் தகவல்….

 

அலுவலகத்துக்கு வர விருப்பம் இல்லையா? கடமைகளிலிருந்து விடுபடுங்க….பணியாளர்களுக்கு மத்திய அமைச்சகம் தகவல்….

கொரோனா வைரஸ் பயம் காரணமாக, அலுவலத்துக்கு வர விருப்பம் இல்லையென்றால் 20ம் தேதிக்குள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து பொறுப்புகளிலிருந்து விடுபடுங்க என தனது துறையை சேர்ந்த அரசு பணியாளர்களுக்கு மத்திய நுகர்வோர் விவகாரம் துறை அமைச்சகம் அலுவலக குறிப்பாணை அனுப்பியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவையடுத்து, கடந்த திங்கட்கிழமை முதல் மத்திய அமைச்சர்கள் அனைவரும் அலுவலகத்துக்கு வந்து பணிபுரிந்து வருகின்றனர். 3ல் ஒரு பகுதி பணியாளர்களை வைத்து அமைச்சக பணிகளை மேற்கொண்டால் போதும் எனவும் பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார். இதனால் மத்திய அமைச்சகங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்கி வருகின்றன.

மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் துறை அமைச்சகம்

மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் துறை அமைச்சகத்தில் மிகவும் குறைந்த அளவே பணியாளர்கள் வந்து இருந்தனர். இதனையடுத்து அந்த அமைச்சகம் தனது துறையில் வேலைபார்க்கும் அரசு பணியாளர்களுக்கு அலுவலக குறிப்பாணை அனுப்பியது. அந்த அலுவலக குறிப்பாணையில், இந்த துறையில் தொடர விரும்பாத அனைத்து அதிகாரிகளும் 2020 மார்ச் 20ம் தேதிக்குள் துறை பிரிவுக்கு தகவல் தெரிவிக்கலாம். இதனால் அவர்களை கடமைகளிலிருந்து விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவித்து இருந்தது.

அதிகாரியுடன் ஆலோசனை செய்யும் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான்

இது தொடர்பாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் தனது டிவிட்டரில், நுகா்வோர் விவகாரங்கள் துறையின் அலுவலக குறிப்பாணை வெளியிட்ட தகவல் எனக்கு தெரியவந்தவுடன், அந்த குறிப்பாணையை திரும்பபெறும்படியும், தெளிவு அறிக்கை வெளியிடும்படியும் நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலருக்கு அறிவுறுத்தியுள்ளேன். எம்.எச்.ஏ. மற்றும் டிஒபிடி உத்தரவுப்படி, லாக்டவுன் சமயத்தில் அலுவலகம் தொடர்ந்து செயல்படும் என தெரிவித்து இருந்தார்.