அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கலக்கிய தமிழக அமைச்சரின் அடங்காக் காளைகள்…யாருடையது தெரியுமா?

 

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கலக்கிய தமிழக அமைச்சரின் அடங்காக் காளைகள்…யாருடையது தெரியுமா?

வெள்ளை கொம்பன், கருப்பு கொம்பன்  ஆகிய 3 காளைகளும் அடுத்தடுத்து வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.

 உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி  இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு  உறுதிமொழியுடன் தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் துவக்கி வைக்கப்பட்டது. வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளின் திமில்களைப் பற்றி வீரர்களும் சூரத்தனம் காட்டினர். ஆனாலும் பல காளைகள் அவர்களை மிஞ்சி திமிறி ஓடின. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சின்ன கொம்பன், வெள்ளை கொம்பன், கருப்பு கொம்பன்  ஆகிய 3 காளைகளும் அடுத்தடுத்து வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.

ttn

அந்தக் காளைகளை அடக்கும் வீரர்களுக்கு ஏராளமான பரிசுகளும் அறிவிக்கப்பட்டிருந்தன. ஆனால் மூன்று காளைகளும் ஆவேசத்துடன் சீறிப்பாய்ந்ததால் வீரர்களால் அவற்றை நெருங்கக்கூட முடியவில்லை. எல்லாருக்கும் தண்ணி காட்டிவிட்டு துள்ளி குதித்து தப்பியோடின. 

ttn

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் இல்லத்தில் வளர்க்கப்பட்டு வரும் இந்த காளைகளை ஜல்லிக்கட்டில் பங்கேற்க வைக்க விஜயபாஸ்கர் ஏற்கனவே தீவிர பயிற்சி அளித்து வந்தது குறிப்பிடத்தக்கது.