அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு உடல்தகுதி தேர்வு.. 800 வீரர்கள் தேர்ச்சி !

 

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு உடல்தகுதி தேர்வு.. 800 வீரர்கள் தேர்ச்சி !

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் உடல்தகுதி தேர்வின் பிறகே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று முன்னரே அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார்.

மதுரையில் மாட்டுப் பொங்கல் திருநாளையொட்டி, 15 ஆம் தேதி அவனியாபுரம், 16 ஆம் தேதி பாலமேடு மற்றும் 17 ஆம் தேதி அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. வழக்கமாக 18 வயது முதல் வீரர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்கலாம் என்றிருந்த நிலையில் இந்த முறை வயது வரம்பு 21 முதல் 45 வயதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 

ttn

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் உடல்தகுதி தேர்வின் பிறகே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று முன்னரே அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார். அதன் படி, நேற்று அலங்காநல்லூரில் மாடுபிடி வீரர்களுக்கான உடல்தகுதி தேர்வு நடைபெற்றது. அதில், பல மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். 

ttn

அந்த பரிசோதனையில் 50க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர், வீரர்களின் வயது, உடல், எடை மற்றும் உடல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அந்த தேர்வில் மொத்தமாக 800 வீரர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்கான டோக்கன்களும் வழங்கப்பட்டது. இருப்பினும், ஜல்லிக்கட்டு நடைபெறும் அன்று மீண்டும் ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பிறகு தான் வீரர்கள் களத்தில் அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.