அற்பமான காரணங்களை கூறி, 35 ஆண்டுகளாக சனிக்கிழமை வேலை நாட்களை புறக்கணித்த உத்தரகாண்ட் வழக்கறிஞர்கள்….

 

அற்பமான காரணங்களை கூறி, 35 ஆண்டுகளாக சனிக்கிழமை வேலை நாட்களை புறக்கணித்த உத்தரகாண்ட் வழக்கறிஞர்கள்….

உத்தரகாண்டில் டெஹ்ராடூன் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் உள்ள வழக்கறிஞர்கள், நேபாளத்தில் நிலநடுக்கம் போன்ற காரணங்களை கூறி, கடந்த 35 ஆண்டுகளாக அனைத்து சனிக்கிழமை வேலைநாட்களையும் புறக்கணித்ததை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.

2019 செப்டம்பர் 25ம் தேதியன்று உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம், அம்மாநிலத்தில் டெஹ்ராடூன், உதம் சிங்கின் சில பகுதிகள் மற்றும் ஹரித்வார் மாவட்டங்களில் உள்ள வழக்கறிஞர்கள் அனைத்து சனிக்கிழமை வேலைநாட்களை புறக்கணித்தை சட்டத்துக்கு புறம்பானது என தீர்ப்பளித்தது. மேலும், சட்ட ஆணையத்தின் அறிக்கையை மேற்கொள்காட்டி, உள்ளூர் முதல் சர்வதேச பிரச்சினைகளை காரணம் காட்டி வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர் அல்லது நீதிமன்றங்கள் ஆஜராகவில்லை. பெரும்பான்மையான பிரச்சினைகளுக்கு நீதிமன்றங்களின் பணிக்கும் எந்ததொடர்பும் இல்லை என உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தது.

வழக்கறிஞர்கள் பாய்காட் (கோப்பு படம்)

உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் டெஹ்ராடூன் வக்கீல்கள் அமைப்பு மேல்முறையீடு செய்தது. கடந்த வியாழக்கிழமையன்று இந்த மனு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் எம்.ஆர். ஷா ஆகியோர் அடங்கி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அமர்வு கூறியதாவது: இது போன்ற விஷயங்களை நாங்கள் அனுமதிக்க முடியாது. எல்லோரும் ஸ்டிரைக்கில் ஈடுபடுகிறார்கள். 

உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம்

இன்று நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு வேலைநிறுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. நாங்கள் இப்போது கடுமையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு சனிக்கிழமையும் பார் வேலைநிறுத்தத்தில் இருக்கும் என்று நீங்கள் எப்படி சொல்லமுடியும்? நீங்கள் கேலி செய்கிறீர்கள். வழக்கறிஞரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் இறந்தால் பார் முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும்,? இது என்ன. இவ்வாறு கடுமையாக தெரிவித்தது. மேலும் மேல்முறையீட்டு மனு மீதான உத்தரவை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.