அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மாணவருக்கு கொரோனா உறுதி…மருத்துவர்கள் உள்ளிட்ட 20 பேர் தனிமை!

 

அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மாணவருக்கு கொரோனா உறுதி…மருத்துவர்கள் உள்ளிட்ட 20 பேர் தனிமை!

அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்வதற்காக அனுமதிக்கப்பட்ட மாணவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவியுள்ளதால், அதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் இதுவரை 15220 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 15 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். ஆனால், 411 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ள 80% பேர் குணமடைந்து வருவதாகவும், அவர்களுக்கு எந்த அறிகுறியும் இல்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. 

ttn

இந்நிலையில் திருவாரூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்வதற்காக அனுமதிக்கப்பட்ட மாணவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த மாணவருக்கு அறுவை சிகிச்சை செய்ததும் காய்ச்சல் ஏற்பட்டதால், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 20 பேர் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.